உக்ரைனின் கடும் தாக்குதல்: அவசர நிலையை பிரகடனப்படுத்திய ரஷ்யா
உக்ரைன் படைகளின் தாக்குதல்களைத் தொடர்ந்து ரஷ்ய எல்லைப் பகுதியான பெல்கோரோடில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த பகுதியில் தினசரி எறிகணை தாக்குதல்கள் நடப்பதால் நிலைமை மிகவும் கடினமானது என்றும் வீடுகள் அழிக்கப்படுகின்றன, பொதுமக்கள் இறக்கின்றனர் மற்றும் காயமடைகின்றனர் என்றும் பெல்கோரோட்டின் ஆளுநர் வியாசஸ்லாவ் கிளாட்கோவ் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே, கடந்த வாரம் ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில் உக்ரைனின் எல்லை தாண்டிய திடீர் தாக்குதலைத் தொடர்ந்து, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அங்கு அவசரகால நிலையை அறிவித்தார்.
முழு அளவிலான படையெடுப்பு
2022 இல் மொஸ்கோ அதன் முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கியதிலிருந்து ரஷ்யாவிற்குள், உக்ரைன் படைகள் ஆழமான ஊடுருவலின் கீழ் எல்லைக்குள் மேலும் முன்னேறிவிட்டதாக உக்ரைனின் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில் இராணுவத் தலைவர் ஒலெக்சாண்டர் சிர்ஸ்கி, ரஷ்யாவின் "40 சதுர கிலோமீட்டருக்கு மேலான பிரதேசம் தமது கட்டுப்பாட்டில் இருப்பதாகக் கூறியுள்ளார்
எனினும் ரஷ்ய நிலப்பரப்பை கைப்பற்றி தக்க வைப்பது தமது நோக்கம் அல்ல என்று அவர் குறிப்பிட்டுள்ளார்
நியாயமான அமைதியை மீட்டெடுப்பதற்கு ரஷ்யா எவ்வளவு சீக்கிரம் ஒப்புக்கொள்கிறதோ... அவ்வளவு விரைவில் ரஷ்யாவுக்குள் உக்ரைன் பாதுகாப்புப் படைகள் நடத்தும் தாக்குதல்கள் நிறுத்தப்படும் என்று அவர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
ரஷ்ய ஜனாதிபதி
இதற்கிடையில் அமைதியான தீர்வுத் திட்டத்திற்குத் திரும்புவதற்கான ரஷ்ய முன்மொழிவுகளை உக்ரைன் நிராகரித்துள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி புடின் தெரிவித்துள்ளார்.
எதிரி, தனது மேற்கத்திய எஜமானர்களின் உதவியுடன், அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதாகத் தோன்றுகிறது என்றும் அவர் கூறியுள்ளார்
உக்ரேனிய முன்னேற்றத்தை நிறுத்த ரஷ்யா இதுவரை போராடி வருகிறது, கிட்டத்தட்ட 200,000 ரஷ்யர்கள் குர்ஸ்க் பிராந்தியத்தின் சில பகுதிகளில் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர் என்று மொஸ்கோ கூறியுள்ளது
இதேவேளை, 2014 இல் இணைக்கப்பட்ட கிரிமியா உட்பட அனைத்து உக்ரேனிய பிரதேசங்களில் இருந்தும் ரஷ்யப் படைகள் வெளியேறும் வரை உக்ரைன், மொஸ்கோவுடன் பேச்சுவார்த்தை நடத்தாது என்று ஜனாதிபதி செலென்ஸ்கி நீண்ட காலமாகக் கூறி வருகிறார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |