அமெரிக்கா - ரஷ்யா விண்வெளி உறவில் விரிசல்! அவசரமாக பூமிக்கு திரும்பும் வீரர்கள்
ரஷ்யா - உக்ரைன் போர் இன்றுடன் 20 ஆவது நாளாக தொடர்ந்து தீவிரமடைந்து வருகின்றது.
இந்நிலையில், 2030ம் ஆண்டு வரை விண்வெளி நிலையத்தில் இணைந்து பணிபுரிய வேண்டும் என்று அமெரிக்காவின் நாசா, கனடா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளன.
இதற்கு ரஷ்யா மறுப்பு தெரிவித்துள்ள நிலையில்,சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து ரஷ்ய விண்வெளி வீரர்களுடன் அமெரிக்க விண்வெளி வீரர் ஒருவர் அவசரமாக பூமிக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், அமெரிக்கா ரஷ்யா இடையே நிலவி வரும் பதற்றத்திற்கு மத்தியில், அமெரிக்க விண்வெளி வீரர் வேண்டே ஹெய் இரண்டு ரஷ்ய வீரர்களுடன் பூமிக்கு திரும்புவதாகவும், இவர்கள் அனைவரும் ரஷ்யாவின் சோயுஸ் விண்கலத்தில் கசகஸ்தான் நாட்டில் மார்ச் 30ம் திகதி தரையிறங்கவுள்ளதாகவும் நாசா தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பின் விளைவாக, சில விண்வெளி பயணங்கள் திட்டமிட்டபடி செயல்படுத்தப்படுவது ரத்து செய்யப்பட்டுள்ளதுடன், மேலும், பல விண்வெளி ஒப்பந்தங்கள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.