வளைகுடாவில் கடத்தப்பட்ட அமெரிக்க பெண் ஊடகவியலாளர் - போர்பதற்றத்திற்கு மத்தியில் திடீர் பரபரப்பு
ஈராக் தலைநகர் பக்தாத்தில் அமெரிக்க பெண் ஊடகவியலாளர் ஒருவர் மர்ம நபர்களால் கடத்தப்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடத்தப்பட்ட ஊடகவியலாளரை மீட்கும் நோக்கில் பக்தாத் நகர் முழுவதும் ஈராக் பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
மத்திய கிழக்கு நாடுகளின் போர்ச் செய்திகளைத் தொடர்ந்து சேகரித்து வந்த ஷெல்லி கிட்டில்சன் (Shelly Kittleson) என்ற அமெரிக்கப் பெண் ஊடகவியலாளரே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளார்.
தீவிர தேடுதல்
இவர் அமெரிக்காவின் பிரபல செய்தித் தளம் உள்ளிட்ட பல சர்வதேச ஊடகங்களுக்குப் பணியாற்றி வருபவர்.

இந்நிலையில் குறித்த பெண் ஊடகவியலாளர் கடத்தப்பட்டதை ஈராக் உள்நாட்டலுவல்கள் அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், ஊடகவியலாளரை பாதுகாப்பாக மீட்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.
வளைகுடா பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் உச்சகட்டத்தை எட்டியுள்ள சூழலில், பக்தாத்தில் அமெரிக்கப் பிரஜை ஒருவரைக் குறிவைத்து நடத்தப்பட்ட இந்தக் கடத்தல் பெரும் அரசியல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இவரை விடுவிக்க ஈராக் அரசுக்கும் அமெரிக்காவுக்கும் ஈரான் ஆதரவு குழுக்கள் அழுத்தம் கொடுக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.
ஈரான் மீது குண்டுவீச்சு... பந்தயத்தில் 160,000 டொலர் சம்பாதித்த இஸ்ரேலிய இராணுவ அதிகாரி News Lankasri
ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri