கூர்மையான ஆயுதத்தால் தாக்கி ஒருவரைக் காயப்படுத்திய வழக்கில் பிரதேச சபை உறுப்பினர் கைது
கூர்மையான ஆயுதமொன்றினால் ஒருவரைத் தாக்கி கடுமையாகக் காயப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில், இப்பலோகம பிரதேசசபையின் ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இருவருக்கு இடையே முற்றிய வாக்குவாதத்தைத் தொடர்ந்து கலாவெவ மீன்பிடித் துறைமுகத்தில் பிரதேச சபை உறுப்பினரால் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் படுகாயமடைந்த நபர், தற்போதைக்கு கலாவெவ கிராமிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கைது
இச்சம்பவம் தொடர்பாகப் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில், சந்தேகநபர் இப்பலோகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், கூர்மையான ஆயுதத் தாக்குதலில் காயமடைந்த நபரின் உறவினர்கள் குழுவினர் நேற்று (13.11.2026) அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலதிக சிகிக்சை
காயமடைந்த நபரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால், மேலதிக சிகிச்சைக்காக அவரை வேறு மருத்துவமனைக்கு மாற்ற வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தபோதிலும், இதுவரை அவர் மாற்றப்படாததற்குத் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே கைது செய்யப்பட்ட பிரதேசசபை உறுப்பினர் நேற்று (13.11.2026) இப்பலோகம பொலிஸாரால் கெக்கிராவ நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, அவரை எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.