ரணில் - நாமல் தரப்பினருக்கு இடையில் கலந்துரையாடல்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன கட்சியின் இளைஞர் முன்னணி முக்கியஸ்தர்கள் ஆகியோருக்கு இடையில் நேற்று(13.11.2026) ஒரு சுமுகமான கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.
நாமல் ராஜபக்சவின் தலைமையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுணவின் இளைஞர் முன்னணி செயல்படுத்த திட்டமிட்டுள்ள திட்டம் குறித்து ரணில் விக்ரமசிங்கவுக்கு அக்குழுவினர் விளக்கமளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து
தொகுதி மட்டம், மாவட்ட மட்டம், தேசிய மட்டம் என இத்திட்டத்தை எவ்வாறு செயல்படுத்துவது என்பது குறித்தும் அவர்கள் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பொதுவான பிரச்சினைகளில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படும்போது, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இளைஞர் அணியும் எவ்வாறு பங்களிக்க முடியும் என்பது குறித்தும் அவர்கள் விவாதித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.