மத்திய கிழக்கிற்கு திடீரென சென்ற ஹெக்செத்.. இடம்பெற்ற மிக இரகசிய சந்திப்பு
ஈரான் மற்றும் அமெரிக்கா - இஸ்ரேல் இடையிலான போர் 32ஆவது நாளை எட்டியுள்ள நிலையில், அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் (Pete Hegseth) வளைகுடா பிராந்தியத்திற்கு அதிரடியாக இரகசிய விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
சனிக்கிழமை இடம்பெற்ற இந்த விஜயத்தின் போது, 'Operation Epic Fury' நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அமெரிக்கப் படைகளை அவர் நேரில் சந்தித்து கலந்துரையாடினார்.
இந்தச் சந்திப்பு குறித்து கருத்து வெளியிட்ட பீட் ஹெக்செத், "எமது துருப்புக்கள் இந்த யுத்தத்தை தங்களது பிள்ளைகள் மற்றும் பேரப் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக வெற்றிகரமாக முடிக்க விரும்புகின்றனர். இது ஒரு வரலாறு மற்றும் பாரம்பரியம் பற்றியது," என தெரிவித்தார்.
எண்ணெய் முனையங்கள்
மேலும், ஈரான் மீதான தாக்குதல்களைத் தீவிரப்படுத்த இராணுவத்தினர் மத்தியில் பெரும் ஆர்வம் காணப்படுவதாகவும், ஈரான் மீது பாரிய ரக குண்டுகளைப் பயன்படுத்த அவர்கள் அனுமதி கோருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பாதுகாப்பு காரணங்களுக்காக அவர் சென்ற இடங்கள் பகிரங்கப்படுத்தப்படவில்லை. ஈரான் மீதான போரில் அமெரிக்கத் தரைப்படை இறக்கப்படுமா என்ற கேள்விக்கு, "எதிரிக்கு எமது அடுத்த கட்ட நகர்வைத் தெரியப்படுத்த மாட்டோம். ஆனால் அனைத்து தெரிவுகளும் மேசையில் உள்ளன," என பதிலளித்தார்.
I witnessed warriors. A brotherhood of men and women - warriors all. pic.twitter.com/S7cDcATpOI
— Secretary of War Pete Hegseth (@SecWar) March 31, 2026
ஈரானின் இராணுவ பலம் தற்போது முடக்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த சில நாட்கள் மிகவும் தீர்க்கமானதாக அமையும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
ஒருபுறம் கடுமையானத் தாக்குதல்கள் தொடர்ந்தாலும், யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகள் வலுவடைந்து வருவதாக ஹெக்செத் சுட்டிக்காட்டினார்.
இருப்பினும், போர் நிறுத்தம் ஏற்படாத பட்சத்தில், ஈரானின் எண்ணெய் முனையங்கள் மற்றும் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என ஜனாதிபதி ட்ரம்ப் ஏற்கனவே எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



ஈரான் மீது குண்டுவீச்சு... பந்தயத்தில் 160,000 டொலர் சம்பாதித்த இஸ்ரேலிய இராணுவ அதிகாரி News Lankasri
ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri