குண்டு மழை பொழியும் இஸ்ரேல்......! காசாவின் தொலைத்தொடர்பு சேவைகள் முற்றிலும் துண்டிப்பு
புதிய இணைப்பு
காசாவின் வடக்கு பகுதியில் மிகக் கடுமையான தாக்குதல் இன்று இரவு நடைபெற்று வருவதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இந்நிலையில், காசா பகுதியில் இணைய சேவை துண்டிக்கப்பட்டதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.
தொடர் தாக்குதல் காரணமாக காசா உடனான தொடர்பு துண்டிக்கப்பட்டு இருப்பதாக இந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன
முன்னெப்போதும் இல்லாத அளவு ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து காசா மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது
முதலாம் இணைப்பு
ஹமாஸ் அமைப்பு, பலஸ்தீனிய இஸ்லாமிய ஜிஹாத் குழு மற்றும் ஈரானின் புரட்சிகர படை மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது.
குறித்த தகவலை அமெரிக்க திறைசேரி அறிவித்துள்ளது. ஹமாஸ் மீது அமெரிக்கா விதிக்கும் இரண்டாவது சுற்று தடை இது என்பது குறிப்பிடத்தக்கது.
ஈரான் நிதியுதவி வழங்குவதை தடுக்கும் நோக்கத்துடனேயே ஹமாஸ் மற்றும் ஈரானின் புரட்சிகர படை மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது.
சூடுபிடிக்கு தமிழ் அரசியல் களம்..! தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகுங்கள்: விடுக்கப்பட்ட கோரிக்கை
அமெரிக்க திறைசேரி
அத்துடன், ஹமாஸ் முதலீடு செய்துள்ள சொத்துகளையும், ஹமாஸுடன் இணைந்த நிறுவனங்களையும் முடக்கும் விதமாக இந்த பொருளாதார தடைகள் விதிக்கப்படுவதாக அமெரிக்க திறைசேரி அறிவித்துள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள ஹமாஸ் மற்றும் பிற போராளிகளின் குழுக்களை ஈரான் ஆதரிக்கிறது என்பது அமெரிக்காவின் நீண்ட கால குற்றச்சாட்டாக உள்ளது.
அதன்படி, இந்த குழுக்களுக்கு ஈரான் நிதியுதவி வழங்குவதை தடுக்கும் நோக்கத்துடன் ஹமாஸ் மற்றும் ஈரானின் புரட்சிகர படை மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை அறிவித்துள்ளது.