வலுக்கும் முரண்பாடுகளுக்கு மத்தியிலும் சீனா சென்ற அந்தோனி பிளிங்கன்
அமெரிக்க இராஜாங்க செயலாளர் அந்தோனி பிளிங்கன் இன்று (18.06.2023) சீனாவிற்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் நிகழும் அரசியல் மோதல்களுக்கு மத்தியிலும் அமெரிக்காவின் முக்கிய தலைவர் ஒருவர் 5 ஆண்டுகளின் பின்னர் சீனாவுக்கு விஜயம் செய்வது இதுவே முதல் தடவை ஆகும்.
கடந்த பெப்ரவரி மாதம் இந்த பயணம் திட்டமிட்டிருந்ததாகவும், சீனாவால் அனுப்பப்பட்ட "உளவு பலூன்" விவகாரம் தொடர்பாக குறித்த பயணம் தடைப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
முதல் அமெரிக்க அரச அதிகாரி
2021 ஜனவரியில் ஜோ பைடன் அமெரிக்காவின் ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு, சீனாவிற்கு விஜயம் செய்யும் முதல் அமெரிக்க அரச அதிகாரி பிளிங்கன் ஆவார்.
குறித்த விஜயத்தின் போது, சீனாவில் இரண்டு நாட்கள் தங்கியிருந்து அந்நாட்டு ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை சந்திக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
Chinese Foreign Minister Qin Gang meets with #US Secretary of State Antony Blinken in #Beijing. Blinken is on a two-day visit to #China starting from June 18. pic.twitter.com/aLG7gPG1qA
— CGTN (@CGTNOfficial) June 18, 2023
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 2 நாட்கள் முன்

நிலாவை காப்பாற்ற சென்ற சோழன் அப்பாவிற்கு ஏற்பட்ட சோகம்.. அய்யனார் துணை அடுத்த வார பரபரப்பு புரொமோ Cineulagam

அடுத்த வாரம் கண்டிப்பாக சம்பவம் இருக்கு, முத்துவிடம் சிக்கிய ரோஹினி.. சிறகடிக்க ஆசை அடுத்த வார புரொமோ Cineulagam
