சீனா செல்லவுள்ள ஜனாதிபதி ரணில் - இந்திய ஊடகம் தகவல்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் ஜூலை 21ஆம் திகதி இந்தியாவுக்கு செல்கின்ற நிலையில், சீனாவுக்கும் பயணம் மேற்கொள்ளும் தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி ஜனாதிபதி விக்ரமசிங்க ஒக்டோபர் மாதம் சீனாவுக்குச் செல்லவுள்ளதாக த ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
நாடாளுமன்றத்தினால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவியேற்ற பின்னர் சரியாக ஒரு வருடத்துக்கு பின்னர் இந்தியாவின் அழைப்பை ஏற்று அங்கு செல்கிறார்.
பொருளதார நெருக்கடி
முன்னதாக அவருக்கு அழைப்பு விடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட போதும், ஒரு வருடத்தின் பின்னரே அந்த வாய்ப்பு கிட்டியுள்ளது.
இதற்கிடையில் இந்தியா இலங்கைக்கு பொருளதார நெருக்கடிக்கு சர்வதேச நாணய நிதியத்தைக் காட்டிலும் அதிக பங்களிப்பை செய்துள்ளது.
இதேவேளை இலங்கை ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டதன் பின்னர் முதன்முறையாக எதிர்வரும் ஒக்டோபரில் சீனாவுக்கு செல்லும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கைச் சந்திக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 2 நாட்கள் முன்

Ethirneechal: விஷ பாம்பாக மாறிய குணசேகரன்.. நடுசாமத்தில் பதறிய நந்தினி- இது எப்படி முடிவுக்கு வரும்? Manithan

நிலாவை காப்பாற்ற சென்ற சோழன் அப்பாவிற்கு ஏற்பட்ட சோகம்.. அய்யனார் துணை அடுத்த வார பரபரப்பு புரொமோ Cineulagam
