நீரை சிக்கனமாக பயன்படுத்துங்கள்.. சற்றுமுன்னர் வெளியான அவசர அறிவிப்பு
புதிய இணைப்பு
நாடு தழுவிய மின்தடை காரணமாக நீர் விநியோகச் செயல்பாடுகளில் பாதிப்பு ஏற்படக்கூடும் என்பதால், நுகர்வோர் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை கோரியுள்ளது.
நுகர்வோருக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களுக்கு குறித்த சபை வருத்தம் தெரிவித்துள்ளது.
முதலாம் இணைப்பு
நாடு முழுவதும் திடீர் மின்தடை ஏற்பட்டதை தொடர்ந்து பல பகுதிகளில் நீர்விநியோகம் தடைபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கம்பஹா உள்ளிட்ட சில பகுதிகளில் இந்த நீர் விநியோகத்தடை ஏற்பட்டுள்ளதாக எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.
இன்று (17) காலை சுமார் 11.45 மணியளவில் நாடு முழுவதும் மின் தடை ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து, தற்போது நீர் விநியோகத்தடை ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிக்குகளின் போராட்டத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை: ஏற்பட்டாளர் தித்தகல்லே பிக்குவின் ஊடகவியலாளர் மாநாட்டில்...
Switzerland Plus ஒப்பந்தம் மூலம் பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர திட்டம் News Lankasri
Bigg Boss 10: டிடிஎஃப் வாசன் ஆடிய ஆட்டம்... கோட்டை விட்ட போட்டியாளர்கள்! விஜய்சேதுபதி கூறியது என்ன? Manithan