இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ளும் ஜோ பைடன்
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் செப்டம்பர் மாதம் இந்தியாவிற்கு வருகை தரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பில் அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உயரதிகாரி டொனால்ட் லூ தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்தியா - அமெரிக்கா நல்லுறவிற்கு இந்தாண்டு முக்கியத்துவம் வாய்ந்த வருடமாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
மேலும், செப்டம்பரில் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ள ஜனாதிபதி பைடன் எதிர்பார்த்துள்ளதாகவும், ஜி-20 உச்சி மாநாட்டில் அவர் பங்கேற்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே ,நடப்பாண்டில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு அமெரிக்கா விசா வழங்க உள்ளதாகவும், இதில் மாணவர்கள் மற்றும் தகவல் தொழில்நுட்பம் துறையினருக்கு முன்னுரிமை அளிக்கப்பட உள்ளதாகவும் டொனால்ட் லூ தெரிவித்துள்ளார்.