43 சீன நிறுவனங்களின் இறக்குமதிகளுக்கு அமெரிக்கா தடை
சீனாவின் சின்ஜியாங் பகுதியில் சிறுபான்மையினரை கட்டாயப்படுத்தி வேலை வாங்குவதாகவும், மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதாகவும் கூறி, மேலும் 43 சீன நிறுவனங்களின் பொருட்களுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.
அமெரிக்க அரசாங்கம் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின்படி, சீனாவின் முன்னணி மின்தேக்கி தயாரிப்பு நிறுவனமான ஹுனான் ஐஹுவா குழுமம் உட்பட பல நிறுவனங்கள் இந்தத் தடைப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
உழைப்புத் தடுப்புச் சட்டம்
இந்தத் தடையின் மூலம் மின்தேக்கி தயாரிப்புத் துறை மட்டுமன்றி, மருந்தாக்கம், உலோகங்கள் மற்றும் பருத்தி சார்ந்த தொழில்களில் ஈடுபடும் பல்வேறு நிறுவனங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

'உய்குர் கட்டாய உழைப்புத் தடுப்புச் சட்டத்தின்' கீழ் எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கையால், தடைசெய்யப்பட்ட நிறுவனங்களின் எண்ணிக்கை 144-லிருந்து தற்போது 187 ஆக உயர்ந்துள்ளது.
சின்ஜியாங் பகுதியில் உய்குர் மற்றும் இதர மத அல்லது இன சிறுபான்மையினரை சிறப்பு முகாம்களில் அடைத்து வைத்து மனித உரிமை மீறல்களில் சீனா ஈடுபடுவதாக அமெரிக்கா தொடர்ச்சியாகக் குற்றம்சாட்டி வரும் நிலையில், தன் மீதான இந்தக் குற்றச்சாட்டுகளை சீனா திட்டவட்டமாக மறுத்து வருகிறது.
இலங்கை வரலாற்றை புரட்டிப் போட்ட நீதிமன்ற தீர்ப்பு..! ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் நடந்த அதிரடி திருப்பம்
ஸ்பெயினில் இருந்து மொராக்கோவிற்கு திரும்பிய 37,500 அகதிகள்: பலி எண்ணிக்கை 57 ஆக அதிகரிப்பு News Lankasri