காங்கேசன்துறையில் நடந்த நூதன திருட்டு - கைதான எட்டு பேர் தொடர்பில் வெளியான தகவல்
இலங்கையில் இருந்து நூதனமாக இந்தியாவுக்குத் தங்கம் கடத்தியவர்கள் என இலங்கை சுங்கத் திணைக்கள அதிகாரிகளினால் மடக்கிப் பிடிக்கப்பட்ட எட்டு பேர் இன்று(18.06.2026) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கேசன்துறை ஊடாக நேற்று(17.06.2026) நாகபட்டினம் செல்லத் தயாரான சமயம் சுங்க அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்ட 26 பயணிகளில் மேற்கொண்ட ஸ்கானிங் பரிசோதனையில் 6 பேரின் உடம்புக்குள் தங்கத்தைக் கடத்தியமை உறுதி செய்யப்பட்டது.
எட்டு பேர் நீதிமன்றில் முன்னிலை
இவ்வாறு கடத்தல் உறுதி செய்யப்பட்ட 6 பேரும் தங்கள் உடைமையில் மறைத்து வைத்திருந்த இருவருமாக எட்டு பேர் தற்போது சுங்கத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட 8 பேரும் இன்று(18.06.2026) மாலை மல்லாகம் நீதிவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.
பிரபல சீரியல் நடிகரை திருமணம் செய்துகொண்ட நடிகை சியாமந்தா.. அழகிய ஜோடிக்கு குவியும் வாழ்த்துகள் Cineulagam
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri