பெருந்தோட்ட மக்கள் வாழும் 102 பிரதேச செயலகப் பெயர்ப் பட்டியல் கையளிப்பு!(Photos)

Sri Lanka Upcountry People Nuwara Eliya Mano Ganeshan Sri Lankan Peoples Central Province
By Rakesh May 23, 2023 03:05 PM GMT
Report

பெருந்தோட்ட மக்கள் வாழும் 102 பிரதேச செயலகப் பெயர்ப் பட்டியல், நிதி அமைச்சுக்கும் உலக வங்கிக்கும் கையளிக்கப்பட்டுள்ளது என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பனர் மனோ கணேசன் எம்.பி. தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

மத்திய, மேல், சப்ரகமுவ, ஊவா, தென், வயம்ப ஆகிய 6 மாகாணங்களின் பதுளை, மொனராகலை, நுவரெலியா, கண்டி, மாத்தளை, இரத்தினபுரி, கேகாலை, கொழும்பு (அவிசாவளை), களுத்துறை, குருநாகல், காலி, மாத்தறை ஆகிய 12 மாவட்டங்களில் அமைந்துள்ள 102 பிரதேச செயலகப் பிரிவுகளில் பெருந்தோட்டத்துறை அமைந்துள்ளது.

நுவரெலியா மாவட்டம் முதல் வரிசையில்

இந்த பிரதேச செயலக பெயர் பட்டியலை, 'ஆறுதல்' (அஸ்வெசும) என்ற நலன்புரி திட்டத்துக்குப் பொறுப்பான நிதி இராஜாங்க அமைச்சுக்கும், இந்தத் திட்டத்துக்கு நிதி உதவி வழங்கவுள்ள உலக வங்கிக்கும், இன்று அனுப்பியுள்ளேன். மலையகத் தமிழர் என்றால் நுவரெலிய மாவட்டத்தில் வாழும் மக்கள் மட்டுமல்ல. அதுபோன்று, பெருந்தோட்ட மக்கள் என்றால் அது நுவரெலியா மாவட்டத்தில் வாழும் மக்கள் மட்டுமல்ல.

நுவரெலியா முதல் கொழும்பின் அவிசாவளை, பாதுக்கை வரை 12 மாவட்டங்களில் பெருந்தோட்டங்கள் அமைந்துள்ளன. அதேவேளை இந்த நலன்புரித் திட்டம், தோட்ட தொழிலாளருக்கு மாத்திரம் வழங்கப்படும் ஒரு திட்டமும் அல்ல. ஆகவே, பெருந்தோட்டங்களில் எத்தனை பேர் தொழிலாளர்கள் என்ற கணக்கு இங்கே அவசியமில்லை.

இன்று பெருந்தோட்டங்களில் வாழும் மக்களில், பெரும்பான்மையோர் தோட்டத்தொழிலாளர் அல்ல. ஆகவே, பெருந்தோட்டங்களில் வாழும் குடும்பங்களை, அவர்கள் அங்கே தொழில் செய்தாலும் சரி, செய்யாவிட்டாலும் சரி, வறுமை நிலைமையை மாத்திரம் கணக்கில் எடுத்து, அவர்களுக்கு நலன்புரி திட்டத்தில் இணைந்துக்கொள்ள வாய்ப்பு வாய்ப்பு வேண்டும்.

நாட்டின் ஏனைய சமூக குடும்பங்களுக்கு வழங்கப்படும் வாய்ப்புகள் எமது குடும்பங்களுக்கும் வழங்கப்பட வேண்டும். எமது இந்த நிலைப்பாட்டை உலக வங்கியும், நிதி இராஜாங்க அமைச்சும் ஏற்றுக்கொண்டுள்ளன. நாட்டின் வறுமை அதிகமான மாவட்டங்களில், மலையகம் மற்றும் பெருந்தோட்ட மக்கள் அதிகமாக வாழும் நுவரெலியா மாவட்டம் முதல் வரிசையில் உள்ளது.

இந்நிலையில், இதுவரை சேகரிக்கப்பட்ட பெருந்தோட்ட துறை சார்ந்த தரவுகளில், மாவட்டத்தின் பெருந்தோட்ட ஜனத்தொகை விகிதாசாரம் சரியாகப் பொருந்தவில்லை.

நேற்று நிதி இராஜாங்க அமைச்சில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, அமைச்சர் செஹான் சேமசிங்க எமக்கு வழங்கிய தரவுகளில் இது தெரிந்தது. ஆகவே, நுவரெலியா மாவட்டத்திலேயே இன்னமும் விண்ணப்பிக்காத பெருந்தோட்ட மக்கள் இருக்கிறார்கள். அதேபோல்தான் ஏனைய மாவட்டங்களில் நிலைமை நிலவுகிறது.

இதை சரி செய்து நாட்டின் ஏனைய மக்களுக்கு வழங்கப்படும் வாய்ப்புகள், எமது மக்களுக்கும் பாரபட்சமின்றி வழங்கப்பட வேண்டும் என்பதற்காகவே தமிழ் முற்போக்குக் கூட்டணி போராடுகின்றது.

உலக வங்கி, நிதி அமைச்சு, ஜனாதிபதி ஆகிய தரப்புகளுடம் நாம் தொடர்ந்து பேசுகிறோம் என்பதைப் புரிந்துக்கொள்ளாமல், சம்பந்தப்பட்ட விடயத்தில் தெளிவும் இல்லாமல் இது பற்றி பேசி இதை யாரும் குழப்பக் கூடாது. இனி நாம் செய்யவேண்டியது பற்றிய தெளிவு இருக்க வேண்டும். நலன்புரி உதவிக்கு விண்ணப்பிக்க, பெருந்தோட்ட பிரதேசங்களில் வாழும் அனைத்து குடும்பங்களுக்கும் வாய்ப்பு வேண்டும்.

102 பிரதேச செயலக பிரிவுகளிலும் உள்ள பெருந்தோட்ட துறையில் இது நிகழ வேண்டும். ஒரு வீட்டில் வசிக்கும், திருமணமான வெவ்வேறு குடும்பங்களையும் வெவ்வேறாக கணக்கெடுக்க வேண்டும். வழங்கும் நிதி உதவி, பெருநர்களின் வங்கி கணக்குகளுக்கு நேரடியாக வைப்பு செய்யப்பட வேண்டும்.

வங்கி கணக்கு இல்லாதவர்களுக்கு அரசு வங்கிகளில் உடனடியாக விதிகளை தளர்த்தி கணக்குகள் ஆரம்பிக்க இடந்தர வேண்டும். 'ஆறுதல்' (அஸ்வெசும) என்ற நலன்புரி திட்டத்தில் பெருந்தோட்ட நிர்வாகங்களுக்கு, அரசியல் கட்சிகளுக்கு, தொழிற்சங்கங்களுக்குத் தேவையின்றி தலையிட இடம் கொடுக்க கூடாது. அவ்வளவுதான்." - என்றார். 

GalleryGalleryGalleryGalleryGallery
கண்ணீர் அஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சாவகச்சேரி

26 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்

மல்லாகம், Scarborough, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

26 May, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

மாத்தளை, கிளிநொச்சி, புங்குடுதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், Villeneuve-Saint-Georges, France

22 May, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரெழு, சிறுப்பிட்டி

26 May, 2017
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

26 May, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Alphen aan den Rijn, Netherlands

26 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Bremerhaven, Germany, Fribourg, Switzerland, Chennai, India

24 May, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், India, Toronto, Canada

13 Jun, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, London, United Kingdom

26 May, 2017
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இறுப்பிட்டி, கொழும்பு, யாழ்ப்பாணம்

26 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Scarborough, Canada, London, United Kingdom

25 May, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, வவுனியா

06 Jun, 2014
மரண அறிவித்தல்

புளியந்தீவு, Toronto, Canada, புங்குடுதீவு, மட்டக்களப்பு

25 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Ajax, Canada

23 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொட்டாஞ்சேனை, கல்கிசை

24 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, கிளிநொச்சி, Toronto, Canada

25 May, 2021
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Luzern, Switzerland

23 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Coventry, United Kingdom

24 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada

08 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
மரண அறிவித்தல்

கோண்டாவில், கொழும்பு, Scarborough, Canada

21 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US