ஜேர்மனிய மாகாணமொன்றில் நெருங்கும் தேர்தல் : அரசியல்வாதி மீது நிறப்பூச்சு வீச்சு
ஜேர்மன் மாகாணமொன்றில் இந்த வார இறுதியில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிரபல ஜேர்மன் அரசியல்வாதி ஒருவர் மீது நிறப்பூச்சு ( Paint)வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜேர்மனியின் Thuringia மாகாணத்தில், kingmaker கட்சி என அறியப்படும் Sahra Wagenknecht Alliance (BSW) கட்சியின் தலைவர்களில் ஒருவரான Sahra Wagenknecht மீது நிறப்பூச்சு வீசப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முக்கியப் பங்கு
இந்நிலையில் திடீரென தன் மீது நிறப்பூச்சு வீசப்பட்டதால் அவர் சற்று அதிர்ச்சியடைந்தாலும், மீண்டும் தன் ஆதரவாளர்களிடையே உரையாற்றியுள்ளார்.
இதனையடுத்து நிறப்பூச்சு வீசிய நபரை பொலிஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
BSW கட்சி, தேர்தலில் மூன்றாம் இடத்தைப் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், ஆட்சி அமைப்பதில் அக்கட்சி முக்கியப் பங்கு வகிக்கும் என்பதால் அக்கட்சி kingmaker கட்சி என அழைக்கப்படுகிறது.
உக்ரைன் ஊடுருவல் தொடர்பில் புடினுடன் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என Sahra தெரிவித்த கருத்து சர்ச்சையை உருவாக்கியிருந்தது.
மேலும், எதனால் Sahra மீது நிறப்பூச்சு வீசப்பட்டது என்பது மர்மமாகவே நீடித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
12 வருடங்களின் பின்னர் 420 ரூபாவாக உயர்ந்த ரூபாவின் பெறுமதி : துர்ப்பாக்கிய நிலையாக கருதும் ரணில் தரப்பு
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |