சுட்டு வீழ்த்தப்பட்ட F-16 போர் விமானம் : ஜெலென்ஸ்கி எடுத்துள்ள அதிரடி முடிவு
உக்ரைன் படைகளாலையே F-16 போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட நிலையில், ஆத்திரமடைந்த ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி(Volodymyr Zelenskyy) விமானப் படை தளபதியை பொறுப்பில் இருந்து நீக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் உக்ரைன் இராணுவம் தங்களின் முட்டாள்த்தனமான நடவடிக்கையால் நாட்டின் முதல் F-16 போர் விமானத்தையும் மிக முக்கியமான விமானியையும் இழந்துள்ளது.

12 வருடங்களின் பின்னர் 420 ரூபாவாக உயர்ந்த ரூபாவின் பெறுமதி : துர்ப்பாக்கிய நிலையாக கருதும் ரணில் தரப்பு
ட்ரோன் தாக்குதல்கள்
அமெரிக்கா வழங்கியுள்ள பேட்ரியாட் ஏவுகணையால் முன்னணி தொழில்நுட்பம் கொண்ட F-16 போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது.
உக்ரைன் படைகளாலேயே தவறுதலாக இச்சம்பவம் நடந்துள்ளதாக வெளியான தகவலை அடுத்து லெப்டினன்ட் ஜெனரல் மைகோலா ஓலேஷ்சுக் (Mykola Oleshchuk) பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
குறித்த விவகாரம் தொடர்பில் டெலிகிரம் செயலியில் வெளியான ஜனாதிபதி ஜெலென்ஸ்கியின் அறிக்கையும் உறுதி செய்துள்ளது.
இதன்போது கொல்லப்பட்ட விமானி ரஷ்யாவின் சக்தி வாய்ந்த 3 ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தியதுடன், ட்ரோன் தாக்குதல்களையும் முறியடித்துள்ளார்.
அடுத்தகட்ட தாக்குதலுக்கு புறப்பட்டு சென்ற நிலையில் உக்ரைன் ஏவுகணைக்கு பலியாகியுள்ளார். திங்களன்று உக்ரைனின் தவறான முடிவால் இந்த விபத்து நேர்ந்துள்ளது என்றே அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், முன்னர் ரஷ்ய ஏவுகணையால் தாக்கப்பட்டிருக்கலாம் என்றே கூறப்பட்டது. அதன் பின்னர் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் உண்மை தெரியவர சில மணி நேரத்திலேயே ஜனாதிபதி ஜெலென்ஸ்கி நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தங்கம் அதிகம் வைத்திருக்கும் 7 முக்கிய நாடுகள்: தங்கத்தை குவிப்பதற்கான ரகசியம் இதுதான் News Lankasri
