கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனை தொடர்பில் தேவையற்ற வதந்திகள்..!
நெதர்லாந்து அரசின் நிதி உதவியில் கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மகப்பேற்று மற்றும் பெண் நோயியல் பராமரிப்பு சிறப்பு மையம் தொடர்பில் தேவையற்ற வதந்திகள் பரப்பப்படுவதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்ட பொது மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள மகப்பேற்று மற்றும் பெண் நோயியல் பராமரிப்பு சிறப்பு மையத்தின் பெண் நோயியல் விடுதியின் சேவைக்கான பகுதி ஆளுநரால் இன்று புதன்கிழமை காலை(24.09.2025) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இதன்போது அவர் கருத்து தெரிவிக்கையில்,
“இந்த மருத்துவமனையை முழுமையாக இயக்குவதுதான் எங்கள் நோக்கம். அதற்குரிய ஆளணிக்கான அனுமதியைப் பெற்றுக்கொள்வதற்கு தொடர்ச்சியாக முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம்.
மருத்துவமனை நிர்வாகம்
அதேநேரம், இந்த மருத்துவமனையை தற்போது இயக்குவதற்கு நடவடிக்கை எடுத்த கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனை நிர்வாகத்துக்கு எனது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிகழ்வில், வடக்கு மாகாண பிரதம செயலாளர் தனுஜா முருகேசன், வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ப.ஜெயராணி, கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அசேல, கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனை அத்தியட்சகர் பிரபாத், மருத்துவர்கள், தாதியர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் நோயாளர் நலன்புரி சங்கத்தினர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |









திருமணத்தில் கடைசி நேரத்தில் வரப்போகும் பெரிய ட்விஸ்ட்.. எதிர்நீச்சல் தொடர்கிறது லேட்டஸ்ட் ப்ரோமோ Cineulagam
