வடக்கில் தட்டுப்பாடற்ற சீனி விநியோக திட்டம்: நம்பிக்கை வெளியிட்ட டக்ளஸ்
வடக்கு மாகாணத்தில் மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் சீனி விநியோகத்தினை சீர்செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் இன்று(03) இடம்பெற்ற கூட்டுறவு சங்கங்களின் ஆணையாளர்கள், தலைவர்கள், சங்க பிரதிநிதிகளுடனான சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும், 280 ரூபாவிற்கு மேற்படாமல் மக்களுக்கு சீனி விநியோகிக்க வேண்டும் எனவும், தை பொங்கலின் பின்னர் நாகப்பட்டனத்திலிருந்து பயணிகள் கப்பல் சேவையுடன் சரக்கு கப்பலும் வரும் எனவும் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார்.
சீனி தட்டுப்பாடு
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“சீனி தட்டுப்பாடு வடக்கில் நிலவுகின்றது. இவ்விடயம் தொடர்பில் துறைசார் அமைச்சருடன் கலந்துரையாடி வடக்கு மாகாணத்துக்கு 100 மெற்றிக் தொன் சீனியை சதோச ஊடாக மக்களுக்கு விநியோகிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் தை பொங்கலின் பின்னர் நாகப்பட்டணத்திலிருந்து சரக்கு கப்பல் வருவதற்கான கலந்துரையாடல்கள் இடம்பெறுகிறது.
பயணிகள் கப்பலுடன் சரக்கு கப்பலும் வரும். அதன் போது சீனி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைகளிலும், தட்டுப்பாட்டிலும் மாற்றம் ஏற்படும்.
தை பொங்கலின் பின்னர் சரக்கு கப்பலும் வரும். இதுவரை காலி, கொழும்பு பகுதியில் பொருட்கள் இறக்கப்பட்டு இங்கு கொண்டு வரும்போது அதிக செலவு ஏற்படும்.
எனினும் தற்போது, யாழ்ப்பாணத்திற்கு சரக்கு கப்பல் வந்தால் செலவு குறைந்து விலையில்
மாற்றப்படும். அவை கூட்டுறவு சங்கங்கள் ஊடாகவே மக்களிடம் கொண்டு செல்ல
திட்டமிடப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |