ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்குபவர்களுக்கு மாதாந்தம் செலவிடப்படும் இலட்சக்கணக்கான ரூபா
ஜனாதிபதி ஆலோசகர்களாக பணியாற்றும் 15 பேருக்கான மாதாந்த செலவு 22 இலட்சம் ரூபாவை அண்மித்துள்ளதாக ஜனாதிபதி அலுவலகத்தினால் நாடாளுமன்றிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொடுப்பனவுகள் உட்பட இவ்வாறு செலுத்தப்பட்ட தொகை இருபத்தி ஒரு இலட்சத்து தொண்ணூற்று எட்டாயிரத்து எண்ணூற்று முப்பத்தேழு ரூபாயாகும் என கூறப்படுகிறது.
பொருளாதார நிலைப்படுத்தல், மீட்சி மற்றும் வளர்ச்சி ஆகியன தொடர்பான ஆலோசகருக்கு மூன்று இலட்சத்து இருபத்தைந்தாயிரம் ரூபாய்.
ஆலோசகர்களுக்கான பணம்
ஊடகம் மற்றும் தொடர்பாடல் ஆலோசகருக்கு இரண்டு இலட்சத்து பதின்மூன்றாயிரம் ரூபாவும், விஞ்ஞான விவகார ஆலோசகருக்கு ஒரு இலட்சத்து தொண்ணூறு ஆயிரம் ரூபாவும் வழங்கப்படுகிறது.
இதில் இரண்டு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒரு பெண் உறுப்பினரும் அடங்குவர். இந்த மூவருக்கும் எம்.பிக்களுக்கான ஓய்வூதியம் உண்டு என தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதியின் ஆலோசகர்களின் எண்ணிக்கை இருபத்தி மூன்று மற்றும் அவர்களில் எட்டு பேர் சம்பளம் அல்லது கொடுப்பனவுகள் இல்லாமல் சேவை செய்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பணத்தை விட உறவுகளின் மகிழ்ச்சிக்கு மதிப்பளிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

சிக்கந்தர் படுதோல்வி.. முருகதாஸை டார்ச்சர் செய்த சல்மான் கான்!! உண்மையை உடைத்த பத்திரிக்கையாளர் Cineulagam

அஜித் ரசிகர்கள் டபுள் விருந்து!! குட் பேட் அக்லி தொடர்ந்து வெளிவரும் அஜித்தின் ப்ளாக் பஸ்டர் திரைப்படம் Cineulagam
