நாடு தழுவிய ரீதியில் பல இடங்களில் முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கை தொடர்பில் அறிவிப்பு
அரசாங்கம் பெண்களின் உரிமைகளை உறுதி செய்ய வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
அத்துடன் சர்வதேச மகளிர் தினமான இன்று ஐக்கிய தேசியக் கட்சியின் மகளிர் பிரிவு வீதியில் இறங்கி போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது.
பெண்களின் உரிமைகளையும் பொருளாதாரத்தையும் பாதுகாக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தும் வகையில் இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.
நாடாளுமன்ற சுற்று வட்டத்தில் பிரதான போராட்டமும் நாடு தழுவிய ரீதியில் நகரங்களில் மேலும் போராட்டங்களும் நடைபெறவுள்ளதாக லக் வனிதா அமைப்பின் பொறுப்பாளர் சாந்தினி கொஹங்காகே தெரிவித்துள்ளார்.
நாட்டில் சிரமங்களை எதிர்நோக்கும் அனைத்து பெண்களும் கட்சி பேதமின்றி இன்றைய போராட்டத்தில் பங்கேற்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஹார்முஸ் முடக்கத்தால் தத்தளிக்கும் ஆசிய நாடுகள்... சத்தமின்றி கனடா பக்கம் திரும்பிய ஜப்பான் News Lankasri
பிரித்தானியாவில் பெண் காவலரின் பொய் துஷ்பிரயோக குற்றச்சாட்டு: மீண்டும் சிறையில் அடைப்பு News Lankasri