ரணில் தலைமையில் ஐ.தே.க புதிய லோகோ அறிமுகம்
ஐக்கிய தேசியக் கட்சி (UNP), இளைஞர்களை அரசியலில் ஈடுபடுத்தும் நோக்கில் Gen Z UNP என்ற புதிய முயற்சியை ஆரம்பித்துள்ளது.
இதனுடன் கட்சியின் புதிய லோகோவும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கட்சியின் மறுசீரமைப்புத் திட்டத்தின் கீழ், 2000ஆம் ஆண்டுக்குப் பின்னர் பிறந்தவர்களுக்காக Gen Z UNP என்றும், 35 முதல் 40 வயதுக்குட்பட்டவர்களுக்காக Millennial UNP என்றும் புதிய உறுப்பினர் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இளைஞர்களின் அரசியல் பங்களிப்பு
மேலும், ஐ.தே.க 5 ஆண்டுத் தேர்தல் விஞ்ஞாபனங்களுக்குப் பதிலாக, 20 ஆண்டுகால நாட்டின் அபிவிருத்தித் திட்டத்தையும் Green Paper ஊடாகத் தயாரித்து வருகிறது.

இளைஞர்களின் அரசியல் பங்களிப்பை அதிகரித்து, கட்சியை நவீனமயப்படுத்துவதே இந்த முயற்சியின் நோக்கமாகும்.