இரத்தினக்கல்லை இரகசியமாக மறைக்க திடீரென விழுங்கிய நபர்! இறுதியில் நேர்ந்த கதி
இரத்தினபுரியில் நபரொருவர் தனக்கு சொந்தமான சுரங்கத்தில் கண்டெடுக்கப்பட்ட இரத்தினக்கல்லை மறைக்க திடீரென விழுங்கிய சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
இரத்தினபுரியில் இரத்தினக்கல் சுரங்கமொன்றினை நடத்தி வரும் நபர், சுரங்கம் தோண்டும்போது கண்டெடுத்த இரத்தினத்தை தவறுதலாக விழுங்கிவிட்டதாக கூறப்படுகிறது.
பல முயற்சிகள் தோல்வி
இதன்போது இரத்தினக்கல் தொண்டையில் சிக்கிக்கொண்ட நிலையில், அதனை வெளியே எடுக்க பெரும் முயற்சி செய்தும் பலனளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

தொண்டையில் இரத்தினக்கல் சிக்கிய நிலையில் சிகிச்சைக்காக இரத்தினபுரி வைத்தியசாலைக்குச் சென்றால், தனது இரகசியம் வெளிப்பட்டுவிடும் என்று கண்டி தேசிய வைத்தியசாலைக்கு வந்து, தனது தொண்டையில் கல் சிக்கிக்கொண்டதாகக் கூறி சிகிச்சை பெற்றுள்ளார்.
வைத்தியர்கள், அவரது தொண்டையில் சிக்கியிருந்த கல்லை அகற்ற பல முயற்சி மேற்கொண்ட நிலையில் அந்த முயற்சி தோல்வியடைந்துள்ளது.
இதற்கிடையில், கண்டி தேசிய வைத்தியசாலையின் பொலிஸ் பிரிவு சம்பவம் தொடர்பாக குறித்த நபரிடம் விசாரணை நடத்தியுள்ளது.
பொலிஸாருக்கு தகவல்
இதன்போது இரத்தினபுரி வைத்தியசாலையை தவிர்த்து கண்டி வைத்தியசாலைக்கு வந்து அவர் மறைக்க முயன்ற இரகசியம் இறுதியில் வெளிப்பட்டுள்ளது.
இதனையடுத்து நபர் குறித்து இரத்தினபுரி பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த நபர் மேலதிக சிகிச்சைக்காக கண்டி தேசிய வைத்தியசாலையிலிருந்து வெலிசர பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக கண்டி தேசிய வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ரணில் - மகிந்தவால் தனித்து விடப்பட்ட மைத்திரி.. நால்வருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை குறித்து பகிரங்கம்
நிகழ்ச்சியில் மிஷ்கின் என்னை தவறாக தொட்டாரா?... சர்ச்சைக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் விளக்கம் Cineulagam