கனடாவில் பொலிஸார் அதிரடி நடவடிக்கை - தமிழர்கள் உட்பட 21 பேர் கைது
கனடாவில் பொலிஸார் மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கையில் தமிழர்கள் உட்பட 21 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு எதிராக 112 குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
Tow truck தொழில் நடவடிக்கையில் ஏற்பட்ட போட்டி காரணமாக பல்வேறு குற்றச் செயல்கள் இடம்பெற்றதாக ரொரன்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இரண்டு குழுக்கள் இலக்கு வைத்து நடத்தப்பட்ட பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிறப்பு விசாரணை நடவடிக்கை
ரொரன்ரோ பொலிஸாரினால் ப்ராஜெக்ட் ஸ்வோர்ட்ஸ் என்ற சிறப்பு விசாரணை நடவடிக்கை பல மாதங்களாக முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் 21 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சிறப்பு நடவடிக்கையின் மூலம் சட்டவிரோத துப்பாக்கி கடத்தல், வாகனத் திருட்டு, தீவைப்புச் சதி என்பன பொலிஸாரினால் முறியடிக்கப்பட்டுள்ளன.
முழு தானியங்கி துப்பாக்கி உட்பட பல ஆயுதங்கள், 84 தோட்டாக்கள் மற்றும் 250 கிராம் கொக்கெய்ன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளன.
21 பேர் மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள போதிலும் இதுவரை நீதிமன்றத்தினால் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.