மகிந்தவை அவமதித்தால் பாவமாம்! வெளிநாடொன்றில் தேரர் விடுத்த எச்சரிக்கை
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக அவமதிப்புகளை வெளியிடுவது பாவகரமான செயலாகும் என வணக்கத்திற்குரிய வேபதஇர ஹேமலோக தேரர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் போரை முன்னெடுத்த கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்ட தலைவர்களுக்கு தலைமைத்துவம் வழங்கியவர் மகிந்த ராஜபக்சவே எனவும், அத்தகைய தலைவருக்கு உரிய மரியாதை வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாவகரமான செயல்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பிறந்தநாளை முன்னிட்டு, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் ஏற்பாடு செய்யப்பட்ட ஆசி வழிபாட்டு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே தேரர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இன்றைய தலைமுறையினர் எவ்வித அச்சமுமின்றி பாடசாலைகளுக்குச் செல்லவும், தொழில்களுக்குச் செல்லவும், சுதந்திரமாகப் பயணிக்கவும் முடிவதற்கு அன்றைய தலைமைத்துவம் எடுத்த தீர்மானங்களே காரணம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, நாட்டுக்காகத் தலைமைத்துவம் வழங்கியவர்களுக்கு மரியாதை செலுத்துவதுடன், அவர்களின் பங்களிப்பை நினைவுகூர்ந்து நன்றியுணர்வுடன் செயற்படுவது அவசியம் எனவும் தேரர் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், மகிந்த ராஜபக்சவை ஏதேனும் வகையில் அவமதிப்பது பாவகரமான செயலாக அமையும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கு போர் இலங்கையில் ஏற்படுத்தும் தாக்கம்! மத்திய வங்கி ஆளுநர் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்
கனடாவின் Most Wanted பட்டியலில் முதலிடம் - கோல்டி பிராரை பிடிக்க ரூ.1.6 கோடி பரிசு அறிவிப்பு News Lankasri