வாகனக் கடன் மற்றும் குத்தகை விதிகளில் மத்திய வங்கி புதிய கட்டுப்பாடுகள்!
இலங்கை மத்திய வங்கி , வாகனக் கடன் மற்றும் லீசிங் வசதிகளுக்கான மதிப்பீட்டு நடைமுறைகளில் புதிய கடுமையான விதிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
2026 நவம்பர் 10 முதல் இந்த புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளன.
புதிய பதிவு செய்யப்படாத வாகனங்கள், அங்கீகரிக்கப்பட்ட முகவரின் வரி விலைப்பட்டியலில் குறிப்பிடப்பட்ட இறுதி விலையே மதிப்பாகக் கணக்கிடப்படும்.
வரி விலைப்பட்டியல்
மீள் சீரமைக்கப்பட்ட வாகனங்கள் விற்பனையாளரின் வரி விலைப்பட்டியல் அல்லது சுங்க அனுமதியின்போதான மதிப்பு அடிப்படையாகக் கொள்ளப்படும்.
பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு தொழில்முறை மதிப்பீட்டாளரின் மதிப்பீடு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

செயற்கையாக விலையை உயர்த்துதலுக்கு தடை என்ற வகையில், சந்தை மதிப்பை விட அதிகமாக வாகனங்களை மதிப்பிட்டு அதிக கடன் வழங்குவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படுவதற்கான காரணத்தை மத்திய வங்கி விளக்கியுள்ளது.
கடன் தொகை
இதன்படி, சில வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் வாகனங்களின் மதிப்பை செயற்கையாக உயர்த்தி, ஏற்கனவே உள்ள கடன்-பெறுமதி விகித (LTV) கட்டுப்பாடுகளை மீறி அதிக கடன்களை வழங்கியதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
புதிய விதிமுறைகள் LTV சதவீதங்களில் மாற்றம் செய்யவில்லை. ஆனால் வாகனத்தின் மதிப்பை நிர்ணயிக்கும் முறையை கடுமையாக்கியுள்ளன.

இதனால் இனிவரும் காலங்களில் வாகனக் கடன் மற்றும் லீசிங் பெறுபவர்களுக்கு, குறிப்பாக புதிய மற்றும் Reconditioned வாகனங்களுக்கு, கடன் தொகை நிர்ணயிக்கப்படுவதில் மாற்றம் ஏற்படும்.
குக் வித் கோமாளி புகழ் அஷ்வினுக்கு நாளை (நவம்பர் 20) திருமணம்... பெண், பிரபல இயக்குனரின் பேத்தி... Cineulagam
நிகழ்ச்சியில் மிஷ்கின் என்னை தவறாக தொட்டாரா?... சர்ச்சைக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் விளக்கம் Cineulagam