பலத்த பாதுகாப்புடன் CID தலைமையகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட ரொட்டும்ப அமில
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடையதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள ‘ரொட்டும்ப அமில’ இன்று (20) காலை ரஷ்யாவிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
44 வயதான சந்தேகநபர், இன்று முற்பகல் 9.58 மணிக்கு Aeroflot SU-288 விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
பொலிஸாரின் சிவப்பு அறிவித்தல்
கொலை, கப்பம் பெறுதல் மற்றும் பாரிய போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுடன் இவர் தொடர்புபடுத்தப்பட்டுள்ளார்.
‘கிளப் வசந்த’ கொலைச் சம்பவத்துடனும் இவருக்குத் தொடர்பு இருப்பதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

2023ஆம் ஆண்டு பிணையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், இவர் ரஷ்யாவுக்குத் தப்பிச் சென்றிருந்தார்.
இதனையடுத்து, இவரைக் கைது செய்ய சர்வதேச பொலிஸாரின் சிவப்பு அறிவித்தலும் பிறப்பிக்கப்பட்டிருந்தது.
விமான நிலையத்தில் வைத்து CID அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட அவர், மேலதிக விசாரணைகளுக்காக பலத்த பாதுகாப்புடன் கொழும்பிலுள்ள CID தலைமையகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.