பொலிஸ் காவலில் வைக்கப்பட்டிருந்த இளைஞர் மர்ம மரணம்
மாத்தளை பொலிஸ் நிலைய தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவர் திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில் இன்று (20) அதிகாலை உயிரிழந்துள்ளார்.
கண்டி, அம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட குறித்த நபர், மாத்தளை பொலிஸ் நிலையத்தின் முதலாம் இலக்க தடுப்பு அறையில் வைக்கப்பட்டிருந்தார்.
வைத்தியசாலையில் அனுமதி
இதன்போது அவருக்குத் திடீரென சுகயீனம் ஏற்பட்டதையடுத்து, மாத்தளை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

மாத்தளை பொலிஸ் ஊழல் ஒழிப்புப் பிரிவினரால் நேற்று (19) மாத்தளை, ஹித்கொல்ல பகுதியில் வைத்து 3,010 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர் கடுமையாகப் போதைப்பொருளுக்கு அடிமையானவர் எனத் தெரிவித்துள்ள பொலிஸார், கண்டி மற்றும் கிராண்ட்பாஸ் உள்ளிட்ட சுமார் 10 பொலிஸ் நிலையங்களில் இவருக்கு எதிராகப் போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளமை தெரியவந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாத்தளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
நிகழ்ச்சியில் மிஷ்கின் என்னை தவறாக தொட்டாரா?... சர்ச்சைக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் விளக்கம் Cineulagam
குக் வித் கோமாளி புகழ் அஷ்வினுக்கு நாளை (நவம்பர் 20) திருமணம்... பெண், பிரபல இயக்குனரின் பேத்தி... Cineulagam