13 வருட விசாரணைக்கு பிறகு மரண தண்டனை.. நீதிமன்றின் அதிரடி தீர்ப்பு
கடந்த 2013ம் ஆண்டு இடம்பெற்ற கொலைச் சம்பவமொன்றுடன் தொடர்புடைய இரண்டு குற்றவாளிகளுக்குப் பலப்பிட்டிய மேல் நீதிமன்றம் நேற்று (19) மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.
2013 ஜூன் 17ஆம் திகதியன்று மீட்டியாகொட, கலுபே பகுதியில் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறின் போது, களுவாஹந்தி தீபால் வீரரத்ன என்பவர் பொல்லால் தாக்கிக் கொலை செய்யப்பட்டார்.
இதனை தொடர்ந்து, இச்சம்பவம் தொடர்பாக இவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
நீண்டகால விசாரணை
நீண்ட விசாரணைகளின் முடிவில், ஹிக்கடுவை - கலுபே பகுதியைச் சேர்ந்த பொட்கிரா என அழைக்கப்படும் 51 வயதான அப்புவாஹந்தி அஜித் மற்றும் கொரட்டகொட பகுதியைச் சேர்ந்த 41 வயதான லட்டு அமித் ஆகிய இருவருக்கும் மேல் நீதிமன்ற நீதிபதி ருச்சிர வெலிவத்த இந்த மரண தண்டனையை விதித்துத் தீர்ப்பளித்துள்ளார்.

அரச சட்டத்தரணி செனுரி குணதிலக்க நெறிப்படுத்திய இந்த வழக்கை, அக்காலப்பகுதியில் மீட்டியாகொட பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸ் பரிசோதகர் தினேஷ் நிஷாந்த நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில், நேற்று மரண தண்டனை விதிக்கப்பட்ட குறித்த இருவரும் வெலிக்கடை சிறைச்சாலைக்கு மாற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குக் வித் கோமாளி புகழ் அஷ்வினுக்கு நாளை (நவம்பர் 20) திருமணம்... பெண், பிரபல இயக்குனரின் பேத்தி... Cineulagam
நிகழ்ச்சியில் மிஷ்கின் என்னை தவறாக தொட்டாரா?... சர்ச்சைக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் விளக்கம் Cineulagam