இலங்கையில் நோயாளியை காப்பாற்ற உயிரை பணயம் வைத்து போராடிய மக்கள் - தொடருந்து நிலையத்தில் பரபரப்பு சம்பவம்
கம்பஹா, வெயங்கொட தொடருந்து நிலையத்தில் தொடருந்து ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில், வந்த அம்பியுலன்ஸிற்கு பொது மக்கள் உதவிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தொடருந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில், அவசர நோயாளி ஒருவரை ஏற்றிக்கொண்டு அம்பியுலன்ஸ் வண்டியொன்று அங்கு வருகை தந்துள்ளது.
அச்சந்தர்ப்பத்தில் தொடருந்து கடவை மூடப்பட்டிருந்த போதிலும் வீதியில் பயணித்து கொண்டிருந்த பொதுமக்களின் ஒத்துழைப்புடன், அம்பியுலன்ஸ் வண்டி தொடருந்து கடவையை கடந்து செல்வதற்கு வழி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.
தவிர்க்கப்பட்ட விபத்து
எனினும், எதிர்பாராத விதமாக அம்புலன்ஸ் வண்டியின் முன்பக்க சக்கரமொன்று கழன்று போனதால், அவ்வண்டி தொடருந்து பாதைக்குள்ளேயே சிக்கிக் கொண்டது.

மறுபுறத்திலிருந்து மற்றுமொரு தொடருந்து வருகை தரவிருந்த போதிலும், ஆபத்தையும் பொருட்படுத்தாது உடனடியாக செயற்பட்ட அங்கிருந்த பொதுமக்கள், அம்புலன்ஸ் வண்டியை தொடருந்து பாதையிலிருந்து அப்புறப்படுத்தி, ஏற்படவிருந்த பாரிய விபத்தொன்றை தவிர்த்துள்ளனர்.