பாடசாலைக்குள் அத்துமீறி நுழைந்த மர்ம நபர்கள் - மதிய உணவுக்கான பணம் திருட்டு
கிளிநொச்சி மாவட்டத்தில் இயங்கும் பிரபல பாடசாலையொன்றின் வளாகத்தில் அத்துமீறி உள்நுழைந்த மர்ம நபர்கள், அங்கிருந்த உண்டியல்களை திருடிச் சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கிளிநொச்சியில் உள்ள கிறிஸ்தவ பாடசாலையொன்றின் வளாகத்தில் இரவு வேளைகளில் சில மர்ம நபர்கள் அத்துமீறி உள்நுழைந்துள்ளனர்.
உண்டியல்கள் உடைப்பு
இதன்போது,சிறுவர் தினத்தை முன்னிட்டு, மாணவர்கள் பணம் சேர்த்து வைத்திருந்த உண்டியல்களை உடைத்து அதிலிருந்த பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.

அத்துடன், சிறுவர்களின் மதிய உணவுக்காக வைக்கப்பட்டிருந்த டின்மீன்களையும் எடுத்துச் சென்றுள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் பளை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதுடன், மோப்பநாய் உதவியுடன் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.