ஐரோப்பிய நாடொன்றில் கொடூரமாக தாக்கப்பட்ட இலங்கை இளைஞன் - தேடப்படும் மேலும் இரண்டு இலங்கையர்கள்
ஐரோப்பிய நாடான இத்தாலியில் இலங்கையை சேர்ந்த இளைஞன் ஒருவரை கொடூரமாக தாக்கிய மேலும் இரண்டு இலங்கை இளைஞர்கள் தேடப்பட்டு வருகின்றனர்.
சக இலங்கையர் ஒருவரை தாக்கி கொள்ளையடித்தமை தொடர்பில் 25 மற்றும் 27 வயதுடைய இரண்டு இலங்கை இளைஞர்களை San Gregorio di Catania பொலிஸ் நிலைய பொலிஸ் அதிகாரிகளால் தேடப்பட்டு வருகின்றனர்.
பாதிக்கப்பட்டவரின் முறைப்பாட்டிற்கமைய இந்த விசாரணை தொடங்கப்பட்டது.
தேடப்படும் இரண்டு இலங்கையர்கள்
தாக்குதல் சம்பவங்களை அதிகாரிகள் மறுஆய்வு செய்து, குற்றத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இருவரையும் உடனடியாக கண்டறிய ஆதாரங்களை சேகரித்து வருகின்றனர்.

San Gregorio di Cataniaவில் வசிக்கும் இளம் பேக்கரி சமையல்கலைஞர் ஒருவர், இரவு தாமதமாக வீடு திரும்பிய போது இந்தக் கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அந்த இளைஞர் தனது வீட்டிற்கு அருகில் வந்தபோது, இலங்கையர்கள் இருவரும் கத்தி மற்றும் கட்டையால் அவரைத் தாக்கியுள்ளனர்.
அவரை மடக்கித் தாக்கிய இருவரும், அவரிடமிருந்த தங்கச் சங்கிலி மற்றும் 160 யூரோ பணத்தைத் திருடிக்கொண்டு தப்பியோடியுள்ளார்.
காயங்கள் ஏற்பட்ட போதிலும், இளைஞர் தானே மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று, 30 நாட்கள் மருத்துவ ஓய்வுக்கான அறிவுரையுடன் வீடு திரும்பியுள்ளார்.
சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.