கிளிநொச்சியில் வெடிக்காத நிலையில் கைக்குண்டு மீட்பு
கிளிநொச்சி உமையாள்புரம் பகுதியில் இன்று (04.02.2026) பிற்பகல் வெடிக்காத நிலையில் கைக்குண்டு ஒன்று இனங்காணப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, குறித்த பகுதியில் சிறுவர்கள் தமது பொழுதுபோக்கு நடவடிக்கைக்காக நீர் ஓடும் வாய்க்கால் அருகாமையில் சென்ற போது வெடிக்காத நிலையில் கைக்குண்டு ஒன்றினை அவதானித்துள்ளனர்.
பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கை
உடனடியாக அச்சிறுவர்கள் கிளிநொச்சி பொலிஸாருக்கு அறிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் ஆபத்தான நிலையில் காணப்பட்ட கைக்குண்டினை உரிய பாதுகாப்புடன் அகற்றுவதற்கு கிளிநொச்சி நீதிமன்ற உத்தரவுக்கு தகவலை அனுப்பியுள்ளனர்.

நீதிமன்ற உத்தரவு கிடைக்கும் வரை குறித்த இடத்தில் பாதுகாப்புக்காக கிளிநொச்சி பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

அமெரிக்கா ராணுவத்தில் களமிறங்கிய மாயாவி..! பென்டகன் கையிலெடுத்த Project Maven AI திட்டம் News Lankasri
எனக்கு உங்கள ரொம்ப பிடிக்கும்.. நிலாவிடம் கண்கலங்கிய சோழன்.. அய்யனார் துணை சீரியல் புரோமோ Cineulagam