கைதிகளின் கைகளில் துப்பாக்கிகள் சிக்கியிருக்கலாமென சந்தேகம் - பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு
நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் இன்று காலை தொடக்கம் வெடித்துள்ள வன்முறையின்போது சிறைக் கைதிகளின் கைகளில் துப்பாக்கிகள் சிக்கியிருக்கலாம் என்று அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
மோதலின் போது சிறைக்கைதிகளின் கைகளில் சிறைச்சாலைப் பாதுகாப்பிற்காக களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த துப்பாக்கிகள் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகின்றது.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் மீண்டும் பதற்றம்! 25 பேர் பலி - காயங்களுடன் சிறைக்குள் கைதிகள்: பலரது நிலைமை கவலைக்கிடம்..!
பாதுகாப்பு பலப்படுத்தல்
அவ்வாறான நிலைமையில் நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் இன்னும் தீவிரம் பெறக்கூடும் என்ற அச்சம் காரணமாக சிறைச்சாலையைச் சுற்றிலும் கடுமையான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

நீர்கொழும்பு சிறைக்குள் நிலவும் மோசமான சூழ்நிலையைக் கண்காணிப்பதற்காக இன்று காலை இலங்கை விமானப்படை ஒரு ஆளில்லா விமானத்தை அனுப்பியுள்ளது.
இதேவேளை, நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று காலை மீண்டும் ஏற்பட்ட கலவரத்தில் சிறை அதிகாரிகள் உள்ளடங்களாக 25 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 100 பேர் வரையானோர் கடும் படுகாயத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.