கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
2019 ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் தனது கைது நடவடிக்கையைத் தடுக்கும் ஆணை கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தாக்கல் செய்துள்ள ரிட் மனுவை உயர் நீதிமன்றத்திற்குப் பரிந்துரைக்குமாறு சட்டமா அதிபர் மேல்முறையீட்டு நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
இன்று(06.07.2026) மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, எதிர்மனுதாரர்கள் சார்பில் முன்னிலையான துணை சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹெரத், மனுதாரர் கோரியுள்ள நிவாரணங்கள் அடிப்படை உரிமைகள் தொடர்பானவை என்றும், எனவே அவை மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்குள் வராது என்றும் வாதிட்டுள்ளார்.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் மீண்டும் பதற்றம்! 26 பேர் பலி - காயங்களுடன் சிறைக்குள் கைதிகள்: பலரது நிலைமை கவலைக்கிடம்..!
மனுதாரரான கோட்டாபய ராஜபக்ச
அதன்படி, மனுவை உயர் நீதிமன்றத்திற்குப் பரிந்துரைத்து உத்தரவு பிறப்பிக்குமாறு அவர் நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டார்.

விசாரணையின் போது, மனுதாரரான கோட்டாபய ராஜபக்ச சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்ட ஆலோசகர் ரொமேஷ் டி சில்வா, தமது வாய்மொழி வாதங்களை நிறைவு செய்தார்.
மேலதிக சமர்ப்பிப்புகளுக்காக வழக்கு ஜூலை 9 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
YOU MAY LIKE THIS VIDEO