இயக்கச்சியில் வெடிக்காத நிலையில் குண்டுகள் மீட்பு
கிளிநொச்சி- இயக்கச்சி கோவில் வயல் தனியார் காணியில் இருந்து வெடிக்காத நிலையில் வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
குறித்த வெடிகுண்டுகள் இன்றையதினம்(3) கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், இயக்கச்சி பகுதியை சேர்ந்த பிரதீபன் சதீஷ்குமார் என்பவர் தன்னுடைய காணியில் துப்புரவு பணியை மேற்கொண்டிருந்தார்.

தமிழர் பகுதியில் வெட்டு காயங்களுக்கு உள்ளான நிலையில் மீட்கப்பட்ட இளைஞன்! தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி
மேலதிக நடவடிக்கை
இந்தநிலையில் குறித்த காணிக்குள் குண்டுகள் காணப்படுவதை அவதானித்த அவர் சம்பவம் குறித்து உடனடியாக பொலிஸாருக்கு தெரியப்படுத்தினார்.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு உடனடியாக மருதங்கேணி பொலிஸார் விரைந்து சென்று குறித்த பகுதியை உடன் பாதுகாப்பான பகுதிக்குள் கொண்டு வந்தனர்.
காணிக்குள் காணப்பட்ட அனைத்து குண்டுகளும் பாதுகாப்பான முறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் நாளைய தினம்(4) நீதிமன்ற அனுமதியின் பின் மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






