கருணா உள்ளிட்ட தரப்புக்கு எதிரான தடை! மகிழ்ச்சி வெளியிட்டுள்ள உமா குமரன்
இலங்கை உள்நாட்டுப் போரின் போது கடுமையான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கு எதிரான தடைகள் அறிவிக்கப்பட்டதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் என்று இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த பிரித்தானிய தொழிற்கட்சி (Labour Party) உறுப்பினரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உமா குமரன் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் (sri lanka)இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் போது கடுமையான மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்குப் பொறுப்பான முன்னாள் இலங்கை முப்படை தளபதிகள் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் (LTTE) முன்னாள் தளபதி ஆகியோருக்கு பிரித்தானியா(uk) நேற்று அதிரடியாக தடைகளை விதித்திருந்தது.
இந்நிலையில் குறித்த தடை தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் இதனை தெரிவித்துள்ளார்.
மனித உரிமை மீறல்
இலங்கை உள்நாட்டுப் போரின் போது கடுமையான மனித உரிமை மீறல்கள் மற்றும் மீறல்களுக்குப் பொறுப்பான நான்கு நபர்கள் மீது இங்கிலாந்து அரசாங்கம் தடைகளை விதித்துள்ளது.
இதில் நீதிக்குப் புறம்பான கொலைகள், சித்திரவதை மற்றும்/ பாலியல் அத்துமீறல்கள் ஆகியவை அடங்கும்.
முன்னாள் பாதுகாப்பு படைகளின் பிரதானியும் முன்னாள் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா, முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஒவ் த ஃப்லீட் வசந்த கரன்னாகொட, முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரிய ஆகியோரும் ஐக்கிய இராச்சியத்தினால் தடைகள் விதிக்கப்பட்டவர்களில் அடங்குகின்றனர்.
I welcome today’s announcement of sanctions on individuals accused of serious human rights abuses during the Sri Lankan Civil War. pic.twitter.com/Zeie8YdNqQ
— Uma Kumaran MP (@Uma_Kumaran) March 24, 2025
விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் தளபதிகளில் ஒருவரான கருணா அம்மான் என்றழைக்கப்படுகின்ற விநாயகமூர்த்தி முரளிதரனுக்கும் ஐக்கிய இராச்சியம் தடை விதித்துள்ளது.
அதற்கமைய இவர்கள் நால்வரும் ஐக்கிய இராச்சியத்திற்கான பயணங்களை மேற்கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், ஐக்கிய இராச்சியத்திற்குள் சொத்துக்களை சேகரித்து வைப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சவேந்திர சில்வா உட்பட நால்வருக்கு பிரித்தானியாவால் விதிக்கப்பட்டுள்ள அதிரடி தடை! வரவேற்கும் சிறீதரன்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
