துப்பாக்கி முனையில் ரஷ்யா படை துருப்புக்களை அடிபணிய வைத்த உக்ரைன்
உக்ரைன் மீதான ரஷ்ய போர் கடந்த 33 நாளாக நீடித்து வரும் நிலையில், வான்வெளி, தரைவழி தாக்குதல் மட்டுமின்றி கடல் வழியாகவும் கடுமையான தாக்குதல் நடத்தி வருகின்றது.
இதன்போது ரஷ்ய படைகளுக்கு ஈடு கொடுக்கும் வகையில் உக்ரைன் வீரர்களும் எதிர்த்து போராடி வருகின்றனர்.
இந்நிலையில், ரஷ்ய வீரர்கள் பலரை உக்ரைன் படையினர் பிடித்து வைத்துள்ள காணொளி வெளியாகியுள்ளது.
ரஷ்யாவை சேர்ந்த 7 தளபதிகளை இதுவரையில் உக்ரைன் வீரர்கள் கொன்றுள்ளனர். உக்ரைனில் உள்ள Trostyanets-ஐ கடந்த 1ஆம் திகதி ரஷ்ய வீரர்கள் கைப்பற்றினர். இதனால் ஓய்ந்துவிடாத உக்ரைன் வீரர்கள் மீண்டும் நகரை நேற்று தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்நிலையில் கொத்து கொத்தாக ரஷ்ய வீரர்களை உக்ரைன் படையினர் பிடித்து கைது செய்துள்ளனர். பின்னர் அவர்கள் துப்பாக்கி முனையில் தரையில் குப்புற படுக்க வைக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான காணொளியை உக்ரைன் வீரர் ஒருவர் எடுத்து வெளியிட வைரலாகியுள்ளது.

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 15 மணி நேரம் முன்

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan

சிறகடிக்க ஆசை சீரியல் எப்போது முடிவுக்கு வரும், கிளைமேக்ஸ்.. தொடர் வசனகர்த்தா கொடுத்த பேட்டி Cineulagam
