உக்ரைனின் எதிர்ப்பு கொரில்லா போராக மாறும் - இராணுவ உளவுப்பிரிவு தகவல்
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் 32 ஆவது நாளாக நீடித்து வருகின்றது.
ரஷ்யாவின் தாக்குதல்களில் உக்ரைன் வீரர்கள் மட்டுமின்றி ஏராளமான பொதுமக்களும் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில்,உக்ரைனை இரண்டாக உடைக்க ரஷ்யா முயற்சி செய்யலாம் என்று உக்ரைனின் இராணுவ உளவுப்புரிவு தலைவர் கைரிலோ புடானோவ் தெரிவித்துள்ளார்.
மேலும், இராணுவ தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்திய ரஷ்ய படைகள் தற்போது இராணுவத்திற்கு எரிபொருள் சப்ளை செய்யும் எரிபொருள் கிடங்குகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றது.
ரஷ்ய படையினர் நடத்தி வரும் தாக்குதல்களால் உக்ரைன் குடிமக்கள் உணவு மற்றும் குடிநீருக்கு அல்லப்படுவதாகவும், மக்கள் மத்தியில் ரஷியா கடும் வெறுப்பை விதைத்து வருவதாகவும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.