பாம்பு தீவை மீண்டும் கைப்பறியது உக்ரைன்
உக்ரைனின் பாம்பு தீவில் இருந்து ரஷ்யா வெளியேறியுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்ச தெரிவித்துள்ளது.
கருங்கடலின் வடமேற்கில் உள்ள பாம்பு தீவு, உக்ரைன் மீதான படையெடுப்பின் முதல் நாளில் ரஷ்யாவால் கைப்பற்றப்பட்டது, அன்றிலிருந்து போரில் அது ஒரு பெரிய பங்கைக் கொண்டுள்ளது.
நான்கு மாதங்களுக்கும் மேலாக பாம்பு தீவில் நிலைகொண்டிருந்த ரஷ்யப் படைகள் தற்போது அந்த தீவில் இருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தானிய ஏற்றுமதியைத் தடுக்கவில்லை என்பதை நிரூபிப்பதற்காக "நன்மையின் சைகையாக" தனது படைகளை திரும்பப் பெற்றதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. எனினும், உக்ரைன் அந்த கூற்றை நிராகரித்துள்ளது.
தாக்குதலுக்கு பயந்து வெளியேறிய ரஷ்ய துருப்புகள்
உக்ரேனிலிருந்து தானியப் பொருள்களை ஏற்றுமதி செய்ய ஒரு மனிதாபிமானப் பாதையை அமைக்கும் உலக நிறுவனத்தின் முயற்சியை ரஷ்யா தடுக்கவில்லை என்று காட்டவே தமது துருப்புகள் வெளியேறியதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், ஏவுகணைகளையும் பீரங்கிகளையும் பயன்படுத்திய தமது நடவடிக்கைக்குப் பின்னர் ரஷ்ய துருப்புகள் இரண்டு படகுகளிலிருந்து அங்கு வெளியேறினர் என்று உக்ரேனிய இராணுவம் கூறியுள்ளது.
எவ்வாறாயினும், தீவின் அனைத்து பகுதியிலும் கடும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், அது குறித்த செயற்கை கோள் படங்களும் வெளியாகியுள்ளன.
பெப்ரவரி 24 அன்று ரஷ்யர்களால் கைப்பற்றப்பட்ட பாம்பு தீவு உக்ரைனின் கடற்கரையிலிருந்து 35 கிமீ (22 மைல்) தொலைவில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.