உக்ரைனில் வணிக வளாகத்தின் மீது வீசப்பட்ட ஏவுகணை - பலர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்
உக்ரைனின் பொல்டாவா பகுதியில் உள்ள கிரெமென்சுக் நகரில் உள்ள வணிக வளாகத்தில் ஏவுகணை ஒன்று தாக்கியுள்ளது. இதன்போது குறித்த வணிக வளாகம் முற்றாக தீயில் எரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் பலர் இறந்திருக்கலாம் எனவும், பலர் காயமடைந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. சுமார் 1,000 பேர் வரையில் வணிக வளாகத்தில் இருந்ததாக டெலிகிராமில் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
மீட்புப் பணியாளர்கள் தீயை அணைக்க முயற்சி செய்கிறார்கள், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை கற்பனை செய்து பார்க்க முடியாது. இது ரஷ்ய இராணுவத்திற்கு எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்தவில்லை. எந்த மூலோபாய மதிப்பும் இல்லை.
மக்கள் சாதாரண வாழ்க்கையை வாழ மட்டுமே விரும்பினர், இது ஆக்கிரமிப்பாளர்களை மிகவும் கோபப்படுத்துகிறது.
இயலாமையால், ரஷ்யா தொடர்ந்து சாதாரண மக்களை தாக்குகிறது. அது நியாயமானதாக அல்லது மனிதாபிமானமாக இருக்கும் என்று எதிர்பார்ப்பது வீண்." என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அச்சம்
உள்ளூர் நேரப்படி சுமார் 15:50 மணியளவில் வணிக வளாகத்தை ஏவுகணை தாக்கியதாக கிரெமென்சுக்கில் உள்ள அதிகாரிகள் கூறுகின்றனர். 10,000 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்ட அந்த இடத்தில் தீ விரைவில் வெடித்தது.
எவ்வாறாயினும், இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை சடுதியாக உயரும் என அச்சம் வெளியிட்டப்பட்டுள்ளது.
நகரத்தின் மேயர் இந்த தாக்குதலை "மற்றொரு ரஷ்ய போர்க்குற்றம், மனிதகுலத்திற்கு எதிரான குற்றம் - பொதுமக்களுக்கு எதிரான ஒரு வெளிப்படையான மற்றும் இழிந்த பயங்கரவாத செயல்" என்று தெரிவித்துள்ளார்.
ரஷ்யா போர்க்குற்றம் இழைத்துள்ளது
உக்ரைனின் பொல்டாவா பிராந்தியத்தில் உள்ள கிரெமென்சுக் நகரில் உள்ள ஷாப்பிங் சென்டர் மீது ஏவுகணை வீசி ரஷ்யா போர்க்குற்றம் இழைத்துள்ளதாக பிராந்திய தலைவர் டிமிட்ரோ லுனின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து டெலிகிராமில் அவர் விடுத்துள்ள பதிவில், வணிக வளாகம் இன்னும் தீயில் எரிவதால் தாக்குதலில் கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
ஜனாதிபதி அலுவலகத்தின் துணைத் தலைவர் கைரிலோ திமோஷென்கோவின் கூற்றுப்படி, இரண்டு பேர் இறந்தது உறுதிசெய்யப்பட்டுள்ளது மற்றும் 20 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் 9 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது என்றார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

2,000 நாட்களாக தளராமல் தொடரும் தாய்மாரின் போராட்டம் 20 மணி நேரம் முன்

கமல் ஹாசன், ஸ்ரீதேவி ஒன்றாக எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம்.. இதுவரை பலரும் பார்த்திராத ஒன்று Cineulagam

பாடகர் கே.ஜே.யேசுதாஸ் அவர்களின் 3 மகன்களையும் பார்த்திருக்கிறீர்களா?- அழகிய குடும்ப புகைப்படம் Cineulagam

பாவனிக்கு தாலி கட்டிய அமீர்! திருமணம் செய்து வைத்த விஜய் டீவி - பரபரப்பை ஏற்படுத்திய ப்ரோமோ Manithan

பாரதி கண்ணம்மா சீரியல் புகழ் குழந்தை லட்சுமியின் வீட்டை பார்த்துள்ளீர்களா?- வீடியோவுடன் இதோ Cineulagam

உக்ரைன் போரில் ரஷ்யா தோற்கத் துவங்கிவிட்டது: பிரித்தானிய பாதுகாப்புச் செயலர் வெளியிட்டுள்ள விவரம் News Lankasri

கள்ளக்குறிச்சி மாணவி வழக்கு! இது கொலை தான்... பகீர் கிளப்பும் கைதான ஆசிரியை கிருத்திகா தந்தை News Lankasri
