100 ஆண்டுகளுக்கு பின்னர் ரஷ்யாவுக்கு ஏற்பட்டுள்ள நிலைமை
ரஷ்யாவுக்கு சுமார் 100 ஆண்டுகளுக்கு பின்னர் முதல் முறையாக இறையாண்மை பிணைமுறி பத்திரங்களுக்கான கடனை செலுத்துவதை நிறுத்த நேரிட்டுள்ளது.
மேற்குலக நாடுகள் விதித்துள்ள பொருளாதார தடைகள் காரணமாக பிணைமுறி பத்திரங்களில் முதலீடு செய்த வெளிநாட்டு கடன் உரிமையாளர்களுக்கு பணத்தை செலுத்துவதற்கு ரஷ்யாவுக்கு தடையேற்பட்டுள்ளது.
உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பும் பொருளாதார தடைகளும்

கடந்த பெப்ரவரி மாதம் ரஷ்ய படையினர் உக்ரைன் மீது ஆரம்பித்த ஆக்கிரமிப்பு போர் காரணமாக அமெரிக்கா உட்பட மேற்குலக நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக கடும் பொருளாதார தடைகளை விதித்தன.
ரஷ்யா, இறையாண்மை பிணைமுறி பத்திரங்களுக்கு கடந்த மே மாதம் சுமார் 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்த வேண்டியிருந்தது.
அதனை செலுத்துவதற்கான கால அவகாசமும் இன்றுடன் முடிவடைகிறது.

இந்த நிலைமையானது கடனை செலுத்துவதை தவிர்த்த நிலைமையாக கருதப்படுகிறது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் அந்நிய செலவாணி கையிருப்பு பற்றாக்குறை காரணமாக வெளிநாடுகள் மற்றும் நிறுவனங்களிடம் பெற்ற கடனை திரும்ப செலுத்துவதை ஒத்திவைப்பதாக உத்தியோகபூர்வமாக அறிவித்தது.
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri