பஹ்ரைனுக்கு ட்ரோன் தொழில்நுட்பத்தை வழங்க உக்ரைன் முன்மொழிவு: ஸெலென்ஸ்கி அதிரடி!
உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி, பஹ்ரைன் மன்னர் ஷேக் ஹமத் பின் ஈசா அல் கலீஃபாவைச் சந்தித்து, இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து விரிவான பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்தச் சந்திப்பின் போது, பஹ்ரைனுக்குத் தேவையான அதிநவீன ட்ரோன்களை (Drones) வழங்குவதற்கான ஒப்பந்தம் ஒன்றை ஸெலென்ஸ்கி முன்மொழிந்தார்.
ஸெலென்ஸ்கி அதிரடி
உக்ரைன் தினசரி அடிப்படையில் பயங்கரவாதத் தாக்குதல்களை எதிர்கொண்டு வருவதாகவும், முழு அளவிலான தற்காப்புப் போரில் தங்களுக்குக் கிடைத்துள்ள அனுபவத்தை பஹ்ரைனுடன் பகிர்ந்து கொள்ளத் தயாராக இருப்பதாகவும் அவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும், இந்தச் சந்திப்பில் மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா பிராந்தியத்தின் பாதுகாப்புச் சூழல் குறித்து இரு தலைவர்களும் தீவிரமாக ஆலோசித்தனர்.

குறிப்பாக, பஹ்ரைன் மற்றும் பிற நாடுகள் மீது ஈரான் நடத்தி வரும் தாக்குதல்கள் மற்றும் ஹோர்முஸ் நீரிணையில் நிலவும் அசாதாரண சூழ்நிலை குறித்து விவாதிக்கப்பட்டது.
உயிர்களைப் பாதுகாப்பதற்கும், தேசிய பாதுகாப்பை பலப்படுத்துவதற்கும் உக்ரைனின் தொழில்நுட்ப நிபுணத்துவம் பஹ்ரைனுக்குப் பெரிதும் உதவும் என ஸெலென்ஸ்கி உறுதியளித்தார்.
ஈரான்-அமெரிக்கப் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், உக்ரைனின் இந்தத் தூதரக முயற்சி சர்வதேச அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
சரித்திரம் படைத்த தமிழக வெற்றிக்கழகம்! 118 எண்ணை சுற்றும் தமிழக அரசியல் களம் - கோட்டையை கைப்பற்றுவாரா விஜய்
3 எம்.எல்.ஏக்கள் ஒரே குடும்பத்தில்.,அரசியலில் கால்பதிக்கும் லாட்டரி மார்டின் குடும்பம் News Lankasri
நடிகர் ஜீவாவின் தந்தை, தயாரிப்பாளர் RB சவுத்ரி விபத்தில் மரணம்! அதிர்ச்சியில் சினிமா துறை Cineulagam