ட்ரம்ப் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட தயாராகும் உக்ரைன்
உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்புடன் "நேரடியாக" பணியாற்ற விரும்புவதாக கருத்து வெளியிட்டுள்ளார்.
ரஷ்யா தனது தாக்குதல்களை தீவிரப்படுத்துகையில், அதற்கான பதிலடிடைய வழங்குவதாற்கான திட்டமாக இது அமையும் என ஜெலென்ஸ்கி சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் உக்ரைனின் யோசனைகளைப் ட்ரம்ப் அரசாங்கத்துடன் பகிர்ந்துக்கொள்ள விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ட்ரம்ப் தரப்பின் யோசனை
இதன்போது ட்ரம்ப் தரப்பின் யோசனைகள் தொடர்பிலும் கலந்தாலோசிக்க உள்ளதாகவும் ஜெலென்ஸ்கி விருப்பம் வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில், அமெரிக்க வெளியுறவுத் துறையின் கூற்றுப்படி, பெப்ரவரி 2022 இல் ரஷ்யா முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கியதிலிருந்து உக்ரைனின் போர் முயற்சிகளுக்கு இதுவரை அந்நாட்டு அரசாங்கம் 64.1 பில்லியன் டொலர் பெருமதியான இராணுவ உதவிகளை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
வண்டியை எரிக்க சென்ற முல்லையை வெளுத்து வாங்கிய ஜனனி... எதிர்நீச்சல் தொடர்கிறது மாஸ் புரொமோ Cineulagam
கில்லியை ஓரங்கட்டி முதல் நாள் ரீ-ரிலீஸ் வசூலில் மாஸ் காட்டிய ரஜினியின் படையப்பா... தெறிக்கும் வசூல் Cineulagam