ஐசிசி தலைவர் ஜெய் சா துபாய் தலைமையகத்துக்கு விஜயம்
சர்வதேச கிரிக்கெட் சம்மேளன (ICC) தலைவராக நியமிக்கப்பட்டுள்ள, ஜெய் சா இன்று துபாயில் உள்ள சம்மேளனத்தின் தலைமையகத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
அங்கு சம்மேளனத்தின் இயக்குநர்கள் மற்றும் பணியாளர்களை அவர் சந்தித்துள்ளார்.
இந்த விஜயம், சம்மேளனத்தில் உள்ள தமது சகாக்களுடன் இணைவதற்கு விலைமதிப்பற்ற வாய்ப்பை வழங்கியது என்று அவர் இந்த விஜயத்தின் பின்னர் குறிப்பிட்டுள்ளார்.
கிரிக்கெட் சம்மேளனம்
இதன்போது, எதிர்காலத்தை வடிவமைப்பதற்கான ஆரம்ப வரைபடத்தையும் உத்திகளையும் இயக்குநர்களுடன் விவாதித்ததாக ஜெய் சா தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், கிரிக்கெட் விளையாட்டின் இலட்சிய பார்வைக்காக, புதிய தலைவரை, துணைத் தலைவர் இம்ரான் குவாஜா பாராட்டியுள்ளார்.
அவரது பதவிக்காலத்தில், இயக்குநர்களின் உற்சாகத்தைப் பகிர்ந்து கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, 2020ஆம் ஆண்டு முதல் ஐசிசி என்ற சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின் தலைவர் பதவியை வகித்த கிரெக் பார்க்லேக்குப் பின்னர் ஜெய் சா தலைவராக பதவியேற்றுள்ளார். இதற்கு முன்னர், அவர் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் செயலாளராக பதவி வகித்து வந்தார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
திருமணத்திற்காக இந்தியா வந்துள்ள டிரம்ப் மகன், ஜெனிபர் லோபஸ் - யார் இந்த நேத்ரா மந்தேனா? News Lankasri
சிறகடிக்க ஆசை சீரியலில் டம்மி ஆகிவிட்டதா மீனா ரோல்.. கடும் கோபத்தில் ரசிகர்கள்.. புரோமோ வீடியோ Cineulagam
ஜீ தமிழில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருந்த மனசெல்லாம் சீரியல் முடிவுக்கு வந்தது... கிளைமேக்ஸ் காட்சி இதோ Cineulagam
ரஜினி படத்தில் இருந்து வெளியேறிய சுந்தர் சி.. திடீரென குஷ்பூ - கமல்ஹாசன் நேரில் சந்திப்பு! Cineulagam