வவுனியா பல்கலைக்கழத்தின் தேவைகள் தொடர்பில் ஆளுநருடன் கலந்துரையாடல்
வவுனியா பல்கலைக்கழகம் எதிர்கொள்ளும் சில சவால்கள் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுடன் பல்கலைக்கழக துணைவேந்தர் அருளம்பலம் அற்புதராஜா தலைமையிலான குழுவினர் கலந்துரையாடியுள்ளனர்.
குறித்த கலந்துரையாடல், இன்று வியாழக்கிழமை(05.12.2024) ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, பல்கலைக்கழக மாணவர் விடுதி மற்றும் பல்கலைக்கழக ஊழியர்களுக்கான தங்குமிடம் தொடர்பில் ஆராயப்பட்டதோடு இவற்றை அமைப்பதற்கான காணிகளைப் பெற்றுக்கொள்வது தொடர்பில் ஆளுநருடன் ஆலோசனையும் நடத்தப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகத்தின் புதிய பீடம்
மேலும், பல்கலைக்கழகத்துக்கான புதிய கட்டடங்களை அமைப்பதற்கான நிதியைப் பெற்றுக்கொள்வதற்கு கொடையாளிகளின் உதவியைப் பெற்றுத் தருமாறு ஆளுநரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
மேலும், மன்னார் மாவட்ட வவுனியா பல்கலைக்கழத்தின் தேவைகள் தொடர்பில் ஆளுநருடன் கலந்துரையாடப்பட்டதோடு தமது பல்கலைக்கழகத்தின் புதிய பீடத்தை ஆரம்பிப்பதற்கான திட்ட முன்மொழிவு தொடர்பிலும் ஆளுநருடன் கலந்துரையாடப்பட்டது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |