உக்ரைன் முன்னாள் ஜனாதிபதியை கைது செய்ய உத்தரவு
உக்ரைன் முன்னாள் ஜனாதிபதி விக்டர் யானுகோவிச்சை தேசத்துரோக குற்றச்சாட்டில் கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
கிரிமியாவில் உள்ள கடற்படை வசதிகளுக்கான ரஷ்யாவின் குத்தகையை நீட்டித்து 2010 இல் அவர் கையெழுத்திட்ட ஒப்பந்தம் தொடர்பான குற்றச்சாட்டில் அவரை கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
உக்ரைனிய அரச சட்டத்தரணி அலுவலகம் இதனை தெரிவித்துள்ளது. உக்ரைனில் கார்கிவ் ஒப்பந்தம் என்று பரவலாக அறியப்பட்ட இந்த ஒப்பந்தம், ரஷ்யா தனது கருங்கடல் கடற்படையை கிரிமிய துறைமுகமான செவஸ்டோபோலில் வைத்திருக்க அனுமதித்தது.

2014ம் ஆண்டு பாரிய எதிர்ப்புக்களுக்குப் பிறகு ரஷ்யாவிற்குத் தப்பிச் சென்ற யானுகோவிச், ஏற்கனவே தேசத்துரோக குற்றத்திற்காக 13 வருட சிறைத்தண்டனையைப் பெற்றுள்ளார்.
அந்த வழக்கு மார்ச் 1, 2014 அன்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு அவர் அனுப்பிய கடிதத்துடன் தொடர்புடையது, உக்ரைனில் ஒழுங்கை மீட்டெடுக்க ரஷ்ய இராணுவம் மற்றும் பொலிஸ் படைகளைப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொண்டார்.
எவ்வாறாயினும், தன் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் அவர் முன்னர் மறுத்திருந்தார்.
உக்ரைனில் உள்ள துருப்புக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், 2014ம் ஆண்டில் கிரிமியாவைக் கைப்பற்றவும், இணைக்கவும் கார்கிவ் ஒப்பந்தம் ரஷ்யாவிற்கு உதவியதால், யானுகோவிச்சைக் கைது செய்ய கிய்வ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரித்தானிய இராணுவ உதவியுடன் ரஷ்யா கொடியுடன் சென்ற எண்ணெய் கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா News Lankasri
உங்க படம் வந்தா தான் அது பொங்கல்... விஜய்யின் ஜனநாயகன் ரிலீஸ் தள்ளிப்போனது குறித்து பிரபலங்கள் வருத்தம் Cineulagam