ரஷ்யாவின் கடும் வான் பாதுகாப்பு மத்தியில் நடந்த ட்ரோன் தாக்குதல் : வெளியானது தாக்குதலின் இரகசியம்
ரஷ்யாவின் வான் பாதுகாப்பு வியூகங்களுக்கு மத்தியில், அந்த நாட்டின் போர் விமானங்கள் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியமை வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த நாட்டின் 4 விமானப்படைத் தளங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, சுமார் 40 போர் விமானங்கள், உக்ரைனின் ட்ரோன் தாக்குதல்களால் தாக்கியழிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது, எவ்வாறு மேற்கொள்ளப்பட்டது என்பது தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் தகவல்களை வெளியிட்டுள்ளன.
மூன்று ஆண்டு காலப் போர்
இதன்படி, மரக்கட்டைகளுக்குள் ட்ரோன்களை ஒளித்து வைத்து, அவற்றை உக்ரைன், ரஷ்யாவுக்குள கடத்திச் சென்றுள்ளது.
ரஷ்யாவுக்குள் குறித்த ட்ரோன்கள் சென்றதன் பின்னர், தூரத்தில் இருந்து இயக்கும் மின்னியல் கருவியால்( ரிமோட் கொன்ரோல்) மூலம் இந்த தாக்குதல்களை உக்ரைன் வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளது.
முன்னதாக இரண்டு நாடுகளுக்கும் இடையிலான மூன்று ஆண்டு காலப் போரை நிறுத்தும் முயற்சியில், அமெரிக்கா ஈடுபட்டுள்ள நிலையில், ரஷ்யா கடந்த வாரம் உக்ரைன் மீது கடும் தாக்குதல்களை நடத்தியிருந்தது.
இந்தநிலையில் குறித்த தாக்குதலுக்கு பதிலடியாகவே, உக்ரைன் போர் விமானங்கள் மீது ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 6 மணி நேரம் முன்

21 வயதில் முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்ற பெண்.., IAS பதவியை மறுத்த காரணம் News Lankasri
