இலங்கைத் தமிழர்களை இழிவுபடுத்தும் தென்னிந்திய ஊடகங்கள் : பின்னணியில் உள்ள சதி

Sri Lankan Peoples Zee Tamil India Tamil TV Shows
By Rukshy Jun 01, 2025 08:04 AM GMT
Report

அண்மைக்காலமாக சர்வதேச ஊடகங்கள் இலங்கைத் தமிழர்கள் வறுமையில் வாடுவதாகவும், போரினால் நலிந்து போயுள்ளதாகவும் என்ற விம்பத்தை வெளிக்காட்டிக் கொண்டிருக்கின்றன.

சர்வதேச மேடைகளில், குறிப்பாக தென்னிந்திய தொலைக்காட்சிகளில் இலங்கையின் வறுமை என்பது ஒரு நுட்பமாக, அனுதாபம் என்ற பெயரில் விற்கப்படும் செயல்முறையாக பரவலாக காணப்படுகின்றது. 

தென்னிந்திய தொலைக்காட்சிகளில் அண்மைக்காலமாக ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் பலராலும் மிகவும் இரசிக்கப்பட்டு வரும் நிகழ்ச்சியாக பாடல் போட்டி  நிகழ்ச்சிகள் முதன்மை பெற்று வருகின்றன.

அடுத்தாண்டுக்கான அரச மற்றும் வங்கி விடுமுறைகள் தொடர்பான அறிவிப்பு

அடுத்தாண்டுக்கான அரச மற்றும் வங்கி விடுமுறைகள் தொடர்பான அறிவிப்பு

அனுதாபத்திற்கு குறைவே இல்லை

இந்த நிகழ்ச்சிகள் காலகாலமாக மக்களால் விரும்பப்பட்டு பார்க்கப்படும் நிகழ்ச்சிகளாக இருந்தாலும், இந்த நிகழ்ச்சிகளில் இலங்கை போட்டியாளர்களை காட்டும் விதம் விமர்சனங்களையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. 

இது போன்ற செயற்பாடுகள் மக்களிடத்தில் தமது தொலைக்காட்சியை நிலை நிறுத்தும் என்ற பாரிய நம்பிக்கையை உந்துகோளாக கொண்டு, மிக மோசமான ஒரு சமூகத்தை, அவர்களது வறுமையை விற்பனை செய்யும் மோசடி வேலைகளைத் தான் இந்த ஊடகங்கள் கையாண்டு வருகின்றன. 

இலங்கைத் தமிழர்களை இழிவுபடுத்தும் தென்னிந்திய ஊடகங்கள் : பின்னணியில் உள்ள சதி | Indian Tamil Tv Shows About Sri Lanka

இலங்கையில் வாழ்ந்து வரும் ஒவ்வொரு சமூகத்தினரும், தங்களது வாழிடம், தொழில் உள்ளிட்டவற்றால் வேறுபடுகின்றனர். குறிப்பாக தமிழர்களைப் பொறுத்தமட்டில், வடக்கு - கிழக்கு அதிகமாக யுத்தத்தால் பாதிக்கப்பட்ட, பாதிப்புக்களைக் கொண்ட பகுதியாக காணப்படும்.

மலையகத்தைப் பொறுத்தமட்டில் தேயிலைத் தோட்ட தொழில்துறையை நம்பி வாழ்வாதாரத்தைக் கொண்ட பகுதியாக காணப்படும்.

இங்கு வறுமை என்பது  பொதுவானதே.  இருப்பினும், இதே வறுமையை ஆதாரமாகக் கொண்டு பட்டம் பெற்று, பல்வேறு துறைகளில் சாதித்த, சாதித்துக் கொண்டிருக்கும், சாதிக்க காத்திருக்கும் பல தலைமுறைகள் இங்கு உண்டு.

ஆனால், இதேபோன்று தனது திறமைக்கு அங்கீகாரம் தேடி தென்னிந்திய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்குபெறும் இலங்கையர்கள்  விற்பனைப் பொருட்களாக நோக்கப்படுவது என்பது நிச்சயமாக பணத்திற்காக ஒரு சமூகத்தையே இழிவுபடுத்தும் மோசடியாகவே பார்க்கப்பட வேண்டும். 

அங்கு திறமையைவிட, வறுமைக்கும், அனுதாப அலைக்கும் முக்கியத்துவம் வழங்கப்படுகின்றது.  திறமையாளர்களின், சமூகம், வறுமை, கண்ணீர், ஏன் திறமையும் கூட ஒரு தொலைக்காட்சியின் வருமானத்திற்காக விற்பனை செய்யப்படுகின்றது. 

இலங்கையில் இருந்து வந்த போட்டியாளர்கள் என்றால், ஒன்று தேயிலைத் தோட்டத்தில் நொந்து மடிந்து சாப்பாட்டிற்கும் வழியில்லாமல், உண்டியலை உடைத்து விமானம் ஏறிச் சென்றிருக்க வேண்டும்.

இல்லையேல், யுத்தத்தில் செல்லடிப்பட்டு, உறவினரை தொலைத்து யுத்த வடுக்களை  சுமந்து சென்றிருக்க வேண்டும்.  இவற்றையெல்லாம் தவிர்த்து ஒரு சாதாரண திறமையாளனாக அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தொலைக்காட்சி நிறுவனத்தார் விரும்புவதில்லை. 

போட்டியாளர்களின் திறமைக்கு முன்னுரிமை அளிக்கப்படுகின்றதோ இல்லையோ அங்கு அனுதாபத்திற்கு குறைவே இல்லை என்றே கூறலாம்.

ஒரு சோகக் கதைக்கு திரைக்கதை வசனம் எழுதி மிகச் சிறப்பாக இலங்யைர்களின் வறுமையையும், திறமையையும் சேர்த்து விற்பனை செய்கிறது இந்த ஊடகங்கள். 

பரபரப்பாகும் தென்னிலங்கை அரசியல் - 20 பேரை அதிரடியாக கைது செய்ய நடவடிக்கை

பரபரப்பாகும் தென்னிலங்கை அரசியல் - 20 பேரை அதிரடியாக கைது செய்ய நடவடிக்கை

இன்னமும் பரிதாபமான சூழல்

மேற்கூறிய அனைத்து இக்கட்டான சூழல்களும், வறுமையும் இன்னும் மாறிவிடவில்லை.  இருப்பினும் கால மாற்றத்தால் இலங்கையிலுள்ள மக்கள் அவ்வாறான சூழ்நிலைகளில் இருந்து படிப்படியாக வெளிவந்தாலும் சர்வதேச அளவில்  இலங்கையை இன்னமும் பரிதாபமான சூழலிலேயே இந்த நிகழ்ச்சிகள் சித்தரித்து காட்டுகின்றன.

இவ்வாறாக நிகழ்ச்சிகள் ஒருபுறம் இருக்க சில தமிழ் திரைப்படங்களை எடுத்துக் கொண்டால் அதிலே இன்னமும் இலங்கை யுத்தம், அகதிகள், வறுமை இவை அடிக்கடி அங்கு கையாளப்படும் உத்திகளாக பார்க்கப்படுகிறது.

இலங்கைத் தமிழர்களை இழிவுபடுத்தும் தென்னிந்திய ஊடகங்கள் : பின்னணியில் உள்ள சதி | Indian Tamil Tv Shows About Sri Lanka

அதாவது இவற்றை வைத்தே திரைப்படத்திற்கான வசூலை ஈடு செய்யலாம் என்ற ஒரு கண்ணோட்டத்தில் இன்றைய சினிமாத்துறை இயக்குநர்கள் பலர் உள்ளனர்.

இலங்கையில் தமிழ் மக்களிடையே எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கின்றன. அதை முறையாக ஆராய்ந்து அதற்கான கால மாற்றத்தை ஏற்படுத்துவதே ஊடகங்களின் செயற்பாடாகும்.

ஆனால் இங்கு அதன் உண்மை நிலையை ஆழமாக பேசாமல், “emotional selling” ஆக வடிவத்தில் பயன்படுத்தப்படுவது வேதனைக்கு உரியதாகும்.

காரணமின்றி இளைஞனை தாக்கிய மருதங்கேணி பொலிஸார்

காரணமின்றி இளைஞனை தாக்கிய மருதங்கேணி பொலிஸார்

மௌன வன்முறை

கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் கலைஞர்கள் “யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள்” என்று இஙகு அடையாளப்படுத்தப்படுகிறார்கள்.

உண்மையிலேயே இலங்கையின் வறுமை, அதன் வரலாற்றுப் பின்னணி, யுத்த விளைவுகள் மற்றும் பொருளாதார வீழ்ச்சி ஆகியவை மனித துயரங்களாகும்.

ஆனால், இந்த வறுமை நிலைமை, குறிப்பாக தென்னிந்திய ஊடகங்கள், கலை மேடைகள் மற்றும் சமூக தளங்களில் ஒரு "உணர்ச்சி பொருளாக" மாற்றப்பட்டுள்ளமை கவலைக்குரியது.

இலங்கைத் தமிழர்களை இழிவுபடுத்தும் தென்னிந்திய ஊடகங்கள் : பின்னணியில் உள்ள சதி | Indian Tamil Tv Shows About Sri Lanka

இவை  உண்மையை மறைக்கும் விடயங்களாகவும் நிதி சுரண்டுவதற்குரிய இடமாகவும் மக்கள் துயரங்களை பிரதிபலிக்கின்ற பெயரில், அரசியல் சுயநலம் மட்டும் சாதிக்கப்படும் நிலையிலும் காணப்படுகின்றன.

இந்த செயற்பாடுகள், மக்கள் துயரங்களை தமது நிகழ்ச்சிகளின் கருவிகளாக மாற்றும் "மௌன வன்முறையாக" உள்ளது.

இது எதிரொலிக்க வேண்டிய விவாதமாக இருக்க வேண்டும். வறுமையைப் பேசும் ஒவ்வொரு வாய்ப்பும், மாற்றத்தை நோக்கிய அழைப்பாக மாறவேண்டும்

பார்ப்பவர் கண்களுக்கான கண்ணீராக அல்ல, செயலுக்கான சிந்தனையாக இது காணப்பட வேண்டும்.

ஒருவேளை சர்வதேச அளவில் இலங்கையின் துயரம் காட்டப்பட வேண்டிய சூழல் அவசியமாக இருந்தால், இலங்கைத் தமிழ் மக்களின் துயரத்தை மட்டும் அல்ல, நாட்டின் பொருளாதார மற்றும் சமூக நிலையையும் தென்னிந்திய ஊடகங்கள், சமூக அமைப்புகள், திரைப்படங்கள், வணிகத் தொடர்புகள் மற்றும் அரசியல் தளங்களில் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்பதே காலத்தின் தேவையாகும்.

நாட்டை விட்டு தப்பியோட முயற்சிக்கும் அரசியல்வாதிகள்

நாட்டை விட்டு தப்பியோட முயற்சிக்கும் அரசியல்வாதிகள்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 

பொறுப்பு துறப்பு!

இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Rukshy அவரால் எழுதப்பட்டு, 01 June, 2025 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

12 Jul, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Paris, France

15 Jul, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை, திருநெல்வேலி, யாழ்ப்பாணம், பம்பலப்பிட்டி

15 Jul, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, செங்காளன், Switzerland

16 Jul, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
7ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பேர்ண், Switzerland

21 Jul, 2018
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Zürich, Switzerland

24 Jul, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு

17 Jul, 2020
மரண அறிவித்தல்

Narantanai, நீர்கொழும்பு

17 Jul, 2025
மரண அறிவித்தல்

நவிண்டில், Bromley, United Kingdom

15 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

28 Jul, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொக்குவில், Toronto, Canada

19 Jul, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Nebikon, Switzerland

15 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, பெரியதம்பனை, வவுனியா

20 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆலங்குளாய், சங்கானை, யாழ்ப்பாணம், Dammam, Saudi Arabia, Rheine, Germany, Rushden, United Kingdom

29 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோண்டாவில், Watford, United Kingdom

20 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சரவணை கிழக்கு, Stains, France

22 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, ஸ்கந்தபுரம், யாழ்ப்பாணம், Scarborough, Canada

17 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Markham, Canada

22 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Melbourne, Australia

14 Jul, 2025
17ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2008
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், Frutigen, Switzerland

17 Jul, 2024
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Bremen, Germany

10 Jul, 2025
மரண அறிவித்தல்

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

17 Jul, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

வீமன்காமம், வட்டகச்சி, Carshalton, United Kingdom

15 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US