கொழும்பு புறநகர் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி! இருவர் கைது
புதிய இணைப்பு
பெல்லன்வில பிரதேசத்தில் இன்று மாலை நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் இரண்டு பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் இருவர் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த நிலையில் நவகமுவ பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்த நபர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலதிக தகவல்-அஷ்ரப் அலி
உயிரிழப்பு
களுபோவில மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கிச்சூட்டில் 55 வயதுடைய உணவக உரிமையாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முதலாம் இணைப்பு
கொழும்பு- பெல்லன்வில பகுதியில் சற்று நேரத்திற்கு முன்னர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த துப்பாக்கிச் சூட்டில் நபரொருவர் காயமடைந்துள்ளதாகவும், அவர் சிகிச்சைக்காக களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
துப்பாக்கிச் சூடு
நாட்டில் இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 18 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் மொத்தமாக 13 பேர் உயிரிழந்துள்ளதுடன், 10 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலதிக தகவல்-ராகேஷ்
1983 ஜூலை இனப்படுகொலையை வரலாற்று இன உணர்வோடு காவிச் செல்வோம்... 16 மணி நேரம் முன்
சனி - சூரியன் சேர்க்கையால் உருவாகும் அரிய யோகம்: இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது! Manithan
தாக்குதலைத் தீவிரப்படுத்தும் ஹவுதிகள்... சவுதி அராம்கோ எண்ணெய் நிலையம் மீது ஏவுகணை வீச்சு News Lankasri