கோட்டாபய ராஜபக்சவுக்கு புதிய சிக்கலா! அடிக்கடி வெளிநாடு சென்று வந்த முக்கியஸ்தர்..
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தொடர்பான புதிய சட்டநடவடிக்கைகள் மற்றும் விசாரணைகள் குறித்து தற்போது அதிகமாகப் பேசப்பட்டு வருகின்றது.
அத்தோடு, கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான ஆட்சிக்காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் ஒரு சம்பள மற்றும் அரச நிதி தொடர்பான விவகாரம் தற்போது மீண்டும் அரசியல் மற்றும் சட்ட வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது.
இந்தநிலையிலே, கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக அவரது சகோதரியின் மகன் மாலக்க சந்திரதாஸ் என்பவர் கொழும்பு மத்திய புலனாய்வுப்பிரிவில் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
முன்னாள் ஜனாதிபதியின் தனிப்பட்ட செயலாளர் சுகீஸ்வர பண்டார தொடர்பான சம்பவம் குறித்து சிஐடியினர் விசாரணை நடாத்தி வருகின்றனர்.
அத்தோடு, கோட்டாபயவின் ஆட்சிக்காலத்தில் சுகீஸ்வர பண்டார அடிக்கடி சீனா சென்று வந்துள்ளதாகவும் அந்த விடயம் தொடர்பில் விசாரணை நடாத்த வேண்டும் எனவும் கூறப்படுகின்றது.
இந்த விடயம் தொடர்பான விரிவான தகவல்களை நியூஸ் இன்சைட் நிகழ்ச்சியில் காணலாம்.
1983 ஜூலை இனப்படுகொலையை வரலாற்று இன உணர்வோடு காவிச் செல்வோம்... 17 மணி நேரம் முன்
லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி: பிரித்தானிய பிரதமரின் திட்டம் News Lankasri